உலகை அச்சுறுத்தவிருக்கும் மற்றொரு பேராபத்து; 40 கோடி மக்கள் நிலை என்னவாகும்
புவி வெப்பமயலாதலால் அண்டார்டிகா மற்றும் ஐலந்து இடங்களில் உள்ள பனிக்கட்டிகள் மிக வேகமாக உருகி வருகின்றன.
அங்குள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக உருகுவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது.
பூமி வெப்பம் அதிகரிப்பதால் 1992 – 2017 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகி உள்ளன. இதனால் 17.8 மி.மீ அளவுக்குக் கடல்மட்டம் உயர்ந்துள்ளது.
இது இப்படியே தொடருமானால் 2100ஆம் ஆண்டுக்குள் 40 கோடி மக்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும். சிறிய சிறிய தீவுகள் கடலில் மூழ்க வாய்ப்புகள் அதிகம்.