Home Latest News Tamil இரவில் சர்ச்சில் கூட்டுப்பிரார்தனையில் ஈடுபட்ட மக்கள் – போலீஸ் கண்காணிப்போடு சமூக இடைவெளியுடன் வழிபாடு

இரவில் சர்ச்சில் கூட்டுப்பிரார்தனையில் ஈடுபட்ட மக்கள் – போலீஸ் கண்காணிப்போடு சமூக இடைவெளியுடன் வழிபாடு

236
0
இரவில் சர்ச்சில் கூட்டுப்பிரார்தனையில் ஈடுபட்ட மக்கள் - போலீஸ் கண்காணிப்போடு சமூக இடைவெளியுடன் வழிபாடு

Georgian Peoples praying at church while Lockdown

உலகம் முழுவதுமே தற்போது கொரோனாவினால் ஊரடங்கில் உள்ள நிலையில், பல இடங்களில் தங்களது மத வழிபாட்டினை செய்ய மக்கள் முயற்சித்துத்தான் வருகின்றனர்.

இந்தியாவில் அரசிற்கு தெரியாமல் மறைமுகமாக கூடும் மக்களை, காவல்துறையினர் கண்டித்தும் சிலரை அடித்தும் கூட்டத்தினை கலைத்துவருகின்றனர்.

இப்படியிருக்கையில் கொரோனா இருந்தாலும் பரவாயில்லையென்று இரவில் மத வழிபாட்டில் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளனர்.

ஜார்ஜியா நாட்டில் புனித வெள்ளிக்கு மதவழிபாடு செய்வது வழக்கம், அதேபோல் அம்மாத இறுதியில் மெழுகுவர்த்திக்கு பதில், நெருப்பின் மூலம் இறைவழிபாடு செய்வதும் உண்டு.

கொரோனவால் அது விட்டுப்போய்விட கூடாது என்று சமூக இடைவெளியுடன் நேற்று இரவு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைவரும் முகக்கவசம் மற்றும் சரியான விதிமுறைகளை கடைபிடித்ததால், கூட்டுப்பிரார்தனைக்கு அரசே அவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here