இனி ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படாது என்பதை ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிறுவனங்களின் புதிய செயலியில் ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படாது என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்: ஆப்பிள் இன்க் மற்றும் ஆல்பாபெட் இன்க் கூகிள் நிறுவனங்கள் இணைந்து உருவாகிவரும் புதிய தொடர்பு தடமறிதல் செயலியானது கொரோனா சமூக பரவலை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.
இதில் ஜி.பி.எஸ் எனப்படும் இருப்பிடத்தை கண்காணிக்கும் முறையை தடை செய்துள்ளதாக இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிறுவனங்களின் (os) இயக்க முறைமைகள் 99% ஸ்மார்ட்போன்கலில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் கொரோனா பாதித்தவர் எவரேனும் அருகில் உள்ளனரா என அறியும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் ஒரு செயலியை உருவாக்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
தொற்று பரவல் குறித்த விவரங்களை 3-ம் நபர் எவரேனும் தெரிந்துகொள்ள முயன்றால், தனிமனித விவரங்களை குறித்த அரசின் விவரங்களை, அறிந்துகொள்வதை தடுக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்படவுள்ளது.
இந்த செயலி செயல்பட இந்த நிறுவனங்கள் பயனர்களின் புளூடூத் தரவுகளை மட்டுமே பயன்படுத்துகின்றன. ஜி.பி.எஸ் தரவுகளை சேமிக்கவோ பயன்படுத்தவோ இல்லை என்பதை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் பல மாகாணங்களில், கொரோனாவின் பரவல் குறித்து அறிய செயலிகளை உருவாக்கும் நிறுவனங்கள் ஜி.பி.எஸ் தரவுகளை அனுமதி முக்கியம் என்பதை குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்காவின் உதா மாகாணத்தின் ஹெல்தி டுகெதர் காண்டாக்ட் டிரேசிங் செயலியை புளூடூத் மற்றும் ஜி.பி.எஸ் பயன்பாட்டினைக் கொண்டு உருவாக்கிய ட்வென்டி மென்பொருள் நிறுவனம், ஆப்பிள் மற்றும் கூகுள் இல்லாமல் தற்போதைய செயலி சிறப்பாக இயங்குவதாக சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.
ஆப்பிள் மற்றும் கூகுளின் இந்த அணுகுமுறை எங்கள் செயலியை விட சிறந்ததாக இருக்கும் பட்சத்தில், அதன் அம்சங்களை பிகாலத்தில் எங்கள் செயலியுடன் இணைத்துக்கொள்வோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பயன்படுத்தப்படும் ஏபி டிரேஸ் டுகெதர் (ABTraceTogether app) செயலி ஜி.பி.எஸ் சேவையை பயன்படுத்தவில்லை.
எனவே இந்த செயலிக்கு பதிலாக ஆப்பிள் மற்றும் கூகுளின் சேவையை நாங்கள் பயன்படுத்த தயராக இல்லை என அம்மாகாணம் தெரிவித்துள்ளது. இந்த வகையான செயலியை அமெரிக்க பயன்படுத்த அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுகாதார பயன்பாட்டிற்காக ஜி.பி.எஸ் சேவைகளைக் கொண்டு சேகரிக்கப்படும் தனிநபர் தரவுகள் வெளியில் கசியுமாயின் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என தனிமனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.