H-1B விசாதாரர்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு கால அவகாசத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்தும் அந்நாட்டு யூ.எஸ்.சி.ஐ.எஸ் அறிவித்துள்ளது.
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் பெரும் சவாலை சந்தித்து வரும் நிலையில் அமெரிக்காவில் அதன் தாக்கம் தீவிரமடைந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்கும் விதமாகவும், அமெரிக்க வேலை வாய்ப்புகளை பாதுகாப்பதற்காகவும் அமரிக்க அதிபர் அண்மையில் அறிக்கை ஒன்று வெளியிட்டார்.
இந்த அறிக்கையின் மூலம் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் குடியேறுவது நிறுத்தி வைக்கப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே குழப்பத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்திய நிலையில், யூ.எஸ்.சி.ஐ.எஸ் (US Citizenship and Immigration Services) வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பை கருத்தில் கொண்டு, பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான அறிவிப்புகள் வழங்கப்பட்ட எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு 60 நாட்கள் நீட்டித்துள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி பொறியியலாளர்கள் எச்-1பி விசாக்கள் காலாவதியாகும் நிலையில், கோவிட்-19 பாதிப்பு காரணமாக பயண கட்டுப்பாடுகள் நிலவுவதால் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிப்பதன் மூலம் மேலும் எட்டு மாதங்கள் வரை கால நீட்டிப்பு கிடைக்கும்.
மேற்கூறிய கோரிக்கைகளை யு.எஸ்.சி.ஐ.எஸ் பரிசீலிக்கும், அதன் பின்னர் 60 நாட்களுக்குள் கோரிக்கையின் பேரில் பதிலளிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
அந்த அறிக்கையின்படி, யு.எஸ்.சி.ஐ.எஸ் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கும் முன்னர், முடிவெடுத்த நாளிலிருந்து 60 காலண்டர் நாட்கள் வரை பெறப்பட்ட I-290B படிவங்களை பரிசீலிக்கும்.