வட கொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன்’ சமீபத்திய நாட்களில் பொது நிகழ்ச்சி, அலுவலக நிகழ்ச்சி மற்றும் ஊடகம் என எதிலும் தலையை காட்டாததால் வடகொரிய அதிபர் ‘கிம்’ இறந்துவிட்டாரா? உயிருடன் உள்ளாரா? என பல விதத்திலும் வதந்திகள் பரவி வருகின்றன.
வடகொரியாவிற்கு 3ஆம் தலைமுறை வாரிசாக கருதப்படும் கிம் அவருடைய தந்தை 2011ல் இறந்த பின்பு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார்.
இப்போது இவருக்கு பின் சரியான வாரிசு இல்லாத நிலையில் அனு ஆயுதம் வைத்திருக்கும் நாடான வடகொரியாவில் யார் அடுத்த ஆட்சியாளர் என தெரியாத நிலை உள்ளது.
அவரை பற்றிய சரியான உண்மைகள் தெரியவராத நிலையில் அவர், தீவிரமான உடல்நலகுறைவால் பாதிப்படைந்து உள்ளார் எனவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், என பலவாறு வதந்திகள் பரவியபடி உள்ளன.
அவர் இறந்துவிட்டார் எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில் #KIMJONGUNDEAD(கிம்ஜாங்உன் இறந்துவிட்டார்) எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பரவின.
கிம்மை கடைசியாக எப்போது பார்த்தனர் மக்கள்
வடகொரிய ஊடகங்கள் கிம்மை கடைசியாக ஏப்ரல் 11 இல் ஒரு பொது சந்திப்பில் பார்த்ததாக தெரிவிக்கின்றது.
அதற்கு நான்கு நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 15இல் நடந்த கிம்மின் தாத்தா, கிம் இல் சுங்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. அனைவரும் கிம் அந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
பத்திரிக்கைகள் செய்தி
திங்கட்கிழமை அன்று, டெய்லி என் கே(Daily NK) எனும் சியோலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வலைதளம் ஒன்று கிம்மிற்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், புகைப்பழக்கம் மற்றும் உடல் பருமன் காரணமாக இது செய்யப்பட்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சீனாவிலிருந்து மருத்துவக்குழு ஒன்று வடகொரிய அதிபர் கிம்மைசந்தித்து அலோசனை வழங்கி சென்றுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடகொரிய அதிபர் கிம் உலக வல்லரசான அமெரிக்காவிற்கே சவால் விட்டு உலகை திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.