மைக்கேல் ஜாக்சன் இறந்தது போல் நாடகம் ஆடுகிறார். டிஎன்ஏ டெஸ்ட் செய்ய வேண்டும் என சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
ரப்பர் உடம்பு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகில் உள்ள அனைவரையும் தன்னுடைய ரப்பர் உடம்பு நடனத்தால் அசரவைத்தவர் மைக்கேல் ஜாக்சன்.
மைக்கல் ஜாக்சன் கடைசி நிகழ்ச்சியில் நடனம் ஆடப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்பே 2009-ம் ஆண்டு இறந்து விட்டார்.
ஜெர்சியோ கோர்டெஸ்
10 வருடம் கழித்து மைக்கேல் மறையவில்லை. உயிருடன் தான் உள்ளார் என அவரது ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
இந்த சர்சைக்கு காரணம் அர்ஜென்டினாவை சேர்ந்த பாப் நடனக் கலைஞர் ஜெர்சியோ கோர்டெஸ். இவர் மைக்கேல் ஜாக்சனை போன்றே மேக்கப் செய்துகொண்டு நடனம் ஆடி வருகிறார்.
சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், என் ரசிகர்களுக்கு வணக்கம். உங்களை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய இசை நிகழ்ச்சியை கட்டாயம் பார்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதைப் பார்த்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள். இவர் தான் ஒரிஜனல் மைக்கேல் ஜாக்சனே. இறந்து போனது வேறு ஒருவர்.
இவர் உண்மையான மைக்கல் ஜாக்சன் இல்லை எனில் டி.என்.ஏ. பரிசோதனை செய்து நிரூபிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
டி.என்.ஏ. சோதனை
இதுகுறித்து செர்ஜியோ கோர்டெஸ் கூறியதாவது, நான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் கிடையாது. டி.என்.ஏ. சோதனை செய்யத் தயார்.
நான் அந்த வீடியோவில் பேசியது, பத்திரிக்கை நிரூபர் மைக்கேல் வேடமிட்டு பேச சொன்னார். அதனாலேயே அப்படி பேசினேன் எனத் தெரிவித்தார்.
இந்த வீடியோவைப் பார்த்து இவர், ஒரிஜினல் மைக்கேல் ஜாக்சனா? என நீங்களே முடிவு செய்யுங்கள்.