கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டியை அடுத்த வருடம் ஜூலை 23 தேதி ஆரம்பமாகும் என ஒலிம்பிக் நிர்வாகம்
அறிவித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது.
ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன.
சீனாவில் விடவும் அமெரிக்காவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இத்தாலி சீனாவைவிட இறப்பு எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
இந்த வருடம் ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் நடைபெறுமா என்கிற சந்தேகம் ஒலிம்பிக் ரசிகர்களிடையே இருந்து வந்தது.
ஜப்பான் அரசு கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக்கை அடுத்த வருடம் நடத்தலாம் என ஒலிம்பிக் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது
ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் ஒலிம்பிக்கின் உருவாகும் ஒலிம்பிக் போட்டியை அடுத்த வருடம் நடத்தலாம் என முடிவெடுத்து தேதி அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் 2021 ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் நடக்காது என்கிற சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடம் கண்டிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த வீரர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும்.