கொரோனா அப்டேட்; உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் உயிரழப்பு , Overall Corona toll reached one lakh. Coronavirus Outbreak. Corona cases & toll today.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளனர். இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.
உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் இது வரை 206பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் இது வரை 6761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இது வரை 806பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 8 பேர் உயிரழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மேலும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.