FEFSI Ishari Ganesh; தமிழ் சொல்லித் தந்தது மனிதத்தை: நடிகர் சங்கத்திற்கு ஐசரி கணேஷ் பொருளுதவி! கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 600 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்திற்கு அரிசி மூட்டைகளையும், பருப்பு மற்றும் இதர பொருட்களையும் வழங்கியுள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 206 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஃபெப்சி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதியுதவி, அரிசி மூட்டைகளை தானமாகவும் கொடுத்து வருகின்றனர்.
ரஜினிகாந்த், அஜித், சூர்யா குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், யோகி பாபு என்று பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.
அந்த வகையில், தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் இணைந்துள்ளார். ஆம், அவர், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் 600 அரிசி மூட்டைகளையும், பருப்பு மற்றும் இதர பொருட்களையும் வழங்கியுள்ளார்.
மேலும், இந்த போராட்ட காலத்தில் சுமூகமாக பயணிக்க ஏழைகளுக்கு உதவ தங்களால் முடிந்தவரை பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.