சூப்பர் எர்த்: 2-வது சூரிய குடும்பம், 2-வது பூமி கண்டுபிடிப்பு! புதிதாக கண்டறியப்பட்ட சூப்பர் எர்த்தில் வேற்று கிரகவாசிகள் வசிக்க வாய்ப்பு அதிகம்.
நமது சூரிய குடும்பத்திற்கு மிகஅருகில் உள்ள இரண்டாவது நட்சத்திரக் குடும்பம் (milky way galaxy) இதுவாகும்.
இந்த இரண்டாவது நட்சத்திரக் குடும்பத்திற்கு ரெட் டுவர்ஃப் என்று பெயரிட்டுள்ளனர். இந்த சூரிய குடும்பத்தில் ஒரு பூமி போன்ற கோள் சுற்றி வருகின்றது.
அந்தக் கோளிற்கு பர்னார்ட் பி (barnard b or GJ 699 b) என்று பெயரிட்டுள்ளனர். இக்கோளானது பூமியை விட மூன்று மடங்கு அதிக எடைகொண்டது.
பர்னார்ட், ரெட் டுவர்ஃப் நட்சத்திரத்தை 233 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. பர்னார்ட் பி கோளானது சூப்பர் எர்த் என்று அழைக்கப்படுகிறது.
இதன் வெப்பநிலையானது, மைனஸ் 150-170 டிகிரி செல்சியஸ் ஆகும். இவ்வளவு கடும் குளிரிலும் அதன் மையப்பகுதி சூடாக உள்ளது.
சூப்பர் எர்த்தின் மையப்பகுதியில் சூடான இரும்பு மற்றும் நிக்கல் போன்ற தனிமங்கள் இருப்பதால் கோளின் வெப்பநிலை அதிகரித்து (geothermal heating) உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்பட்டு வருகிறது.
இந்த தகவலை அமெரிக்க வில்லநோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இக்கோள் பற்றிய ஆராய்ச்சிகள் 20 வருடமாக நடந்து வருகிறதாம்.
பர்னார்ட் பி கோளின் ரெட் டுவர்ஃப் நட்சத்திரம் நமது சூரியனை விட வயதில் பெரியது. இரண்டு மடங்கு அதிக வயதைக் கொண்டுள்ளது.
நமது சூரியனின் வயது 4.6 பில்லியன் வருடங்கள். ரெட் டுவர்ஃப் நட்சத்திரத்தின் வயது 9 பில்லியன் வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பர்னாட் பி நட்சத்திரக் குடும்பத்தில், நமது பூமியின் அளவுள்ள கோள்கள் நாம் எதிர்பார்ப்பதை விட மிகவும் தொலைவில் அமைந்துள்ளன. அவற்றை அடைய கிட்டதட்ட 5 ஒளியாண்டுகள் ஆகும்.
எட்வர்ட் கினான் இதுகுறித்து கூறியதாவது,
ஜியோதெர்மல் வெப்பத்தால் தான் அண்டார்டிகா கண்டத்தின் ஏரிகளில் உயிரினங்கள் வாழ்கின்றன.
மேலும் வியாழன்கோளின் யுரோப்பா நிலவின் வெப்பநிலையும் (jupiter’s icy moon europa) பர்னார்ட் பி கோளின் வெப்பநிலையும் ஏறத்தாழ ஒரே அளவாகும்.
டைடல் ஹீட்டிங்க் (tidal heating) மூலம் கடலின் மேற்பகுதி திரவமாகவும் அடிப்பகுதி பனிக்கட்டி ஆகவும் காணப்படுகிறது.
வரும் காலங்களில் சூப்பர் எர்த் மிகப்பெரிய தொலைநோக்கியால், பூமியில் இருந்தே பார்க்க இயலும் என்று இயற்பியல் வல்லுனர் எட்வர்ட் கினான் கூறியுள்ளார்.
அவர், இக்கோள் பற்றி 20 வருடங்களாக ஆராய்ச்சி நடப்பதாகக் கூறியுள்ளார். எனவே, வெளியில் தெரியாமல் பல ஆராய்ச்சிகள் ரகசியமாக நடைபெறுவது இதன்மூலம் புலப்படுகிறது.