இறந்த நடிகை ஸ்ரீதேவி: புதிய வீடியோவால் பரபரப்பு!
நடிகை ஸ்ரீதேவி சென்ற ஆண்டு துபாயில் உள்ள ஓட்டலில் நீர்த்தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.
ஸ்ரீதேவி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கருதி துபாய் போலீஸ், உடலை உடனே இந்தியாவிற்கு அனுப்பிவைக்கவில்லை.
ஸ்ரீதேவியின் கணவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியது. இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் மூலமே ஸ்ரீதேவியின் உடலை சீக்கிரம் இந்தியாவிற்கு கொண்டுவர முடிந்தது.
ஸ்ரீதேவி மது போதையில் இருக்கும்போது குளியலறைத் தொட்டியில் இருந்த நீரில் மூழ்கி இறந்ததாக ஒரு செய்தி பரவியது.
ஸ்ரீதேவியின் கணவர் கொலை செய்ததாகவும், அதனால் துபாய் போலீஸ் விசாரணை செய்ததாகவும் மற்றொரு செய்தி பரவியது.
இருப்பினும் ஸ்ரீதேவியின் உடல் அரசு மரியாதையுடன் மும்பையில் அடக்கம் செய்யப்பட்டது. அத்துடன் அந்த சர்சைகளும் ஓய்ந்தது.
தற்பொழுது மலையாள கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியார் நடித்த புதிய படத்தின் ட்ரைலர் பொங்கல் அன்று வெளியானது.
அந்த படத்தின் பெயரே ஸ்ரீதேவி பங்களா. படத்தில் ஸ்ரீதேவி என்ற பெயரில் நடித்துள்ளார். மை, மையில் என ஒரு குழந்தையிடம் சொல்கிறார்.
மது அருந்திவிட்டு அரைநிர்வாணமாக குளியலறையில் அழுவதுபோன்றும், இறந்து கிடப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஒரு ஆதார் லவ் என்ற படத்தில் கண்ணடித்த காட்சி மூலம் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனார்.
தற்பொழுது ஸ்ரீதேவியாக நடித்து கோலிவுட், பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உண்மையில் இப்படம் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்க வாய்ப்பில்லை. பரபரப்பிற்காக காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.