Trump Phase plan to reopen america :
உலகத்திலேயே அமெரிக்காவில் தான் கொரோனாவைரஸ் வேகமாக பரவிவருகிறது. 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனவினால் பாதித்திருந்தாலும், கொரோனாவினை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கை தளர்த்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த மாதமே அமெரிக்காவில் பல நகரங்கள் திறக்கப்படும் என்றும் அதற்கான பல புதிய விதிமுறைகளையும் கூறிய டிரம்ப், லாக்டவுன் திறந்த பின்பு மக்களை அந்தந்த மாகாண கவர்ணர்கள், பெடரல் அரசு உதவியோடு கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை தடுப்பதற்காகவும் மேலும் அதனை முற்றிலுமாக ஒழிக்கவே ஊரடங்கினை பிறப்பித்தது அரசு, ஆனால் அந்த ஊரடங்கினால் எந்த பயனும் இல்லை.
இனிமேலும் இந்த ஊரடங்கு வேலைக்கு ஆகாது என்றும், அமெரிக்காவிற்கும், அமெரிக்க மக்களுக்கும் ஊரடங்கு இனி தேவை இல்லை என்று கூறினார் டிரம்ப்.
அமெரிக்காவினை திறக்க டிரம்ப் கூறிய வழிமுறைகள் (Phase plan to reopen america) :
ஆனால் தற்போது இருக்கும் ஊரடங்கு உடனடியாக முற்றிலுமாக நீக்கப்படாது, ஊரடங்கு மொத்தம் மூன்று கட்டங்களாகத்தான் தளர்த்தப்படும் என்றும், அந்த மூன்று கட்டங்களினை பற்றி தெளிவான முழு உரையும் கொடுத்துள்ளார்.
முதல் கட்டத்தில் வெளியில் கூட்டமாக 10 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்கள் வெளியே வரவேகூடாது என்றும் கூறியுள்ளார். அதுபோக வேலைக்கு செல்லும் நபர்களுக்கும் ஒருசில விதிமுறைகள் உண்டு.
இரண்டாம் கட்டத்தில் வெளியில் கூட்டமாக 50 நபர்களுக்குமேல் எங்கும் இருக்கக்கூடாது என்றும், ஜிம்கள் சரியாக சமூக இடைவெளிகளை கடைபிடித்தால் திறக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மூன்றாம் கட்டத்தில் வழக்கம்போல் நகரம் மாறிவிடும் என்றும், கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்கள் வெளியில் வராமல் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
6 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை கொண்டுள்ள அமெரிக்க அரசு, லாக்டவுன் வேலைசெய்யாது என்று அதனை தளர்த்தபோவதனை பார்த்து பலர் அச்சப்படுகின்றனர்.