Home சினிமா கோலிவுட் டுவிட்டரில் மோதிக்கொண்ட தல, தளபதி ரசிகர்கள்: சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டு வைரல்!

டுவிட்டரில் மோதிக்கொண்ட தல, தளபதி ரசிகர்கள்: சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டு வைரல்!

414
0
Ajith

Vijay Ajith Fans Fight; டுவிட்டரில் மோதிக்கொண்ட தல, தளபதி ரசிகர்கள்: சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டு வைரல்! அஜித், விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் மோதிக் கொண்டு சகட்டுமேனிக்கு மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

டுவிட்டரில், #மே1அஜித்குபாடைகட்டு, #June22BlackdayForVijay ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

என்னும் எத்தனை காலத்திற்குத்தான் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வார்களோ தெரியவில்லை.

அஜித் ரசிகர்கள் விஜய் பற்றியும், விஜய் ரசிகர்கள் அஜித் பற்றியும் மீம்ஸ் உருவாக்கி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்க்கு வரும் ஜூன் 22 ஆம் தேதி பிளாக்டே என்றும், அஜித்துக்கு மே 1 ஆம் தேதி பாடை கட்டு என்றும் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

Ajith Fans

சினிமாவில் அறிமுகமான காலங்களில் இருந்து அஜித் மற்றும் விஜய் இருவருமே நண்பர்களாக இருக்கின்றனர். அஜித்துக்கு, விஜய் பரிசு கொடுப்பதும், விஜய்யை அஜித் பாராட்டுவதும் என்று அவர்கள் இருக்கிறார்கள்.

அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தைப் போன்று உடை அணிந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி கோட் சூட்டில் வந்ததாக விஜய் கூறினார்.

தற்போது கூட கனடாவில் இருக்கும் விஜய் மகன் சஞ்சய் எப்படி இருக்கிறார் என்று அஜித், விஜய்க்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

Thalapathy Fans

அப்படியிருக்கும் போது, விஜய் ரசிகர்கள் அஜித்தைப் பற்றியும், அஜித் ரசிகர்கள் விஜய்யைப் பற்றியும் சகட்டுமேனிக்கு மீம்ஸ் உருவாக்கி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஏன், திடீரென்று இப்படி செய்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை.

வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இன்னும் 13 நாட்கள் இருக்கும் நிலையில், அஜித் குறித்து இப்படி மோசமான டுவிட்டர் #மே1அஜித்குபாடைகட்டு ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதே போன்று மாஸ்டர் படம் விஜய்யைன் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், #June22BlackdayForVijay என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Vijay Fans

Director Siva

SOURCER SIVAKUMAR
Previous articleஇனிமேலும் ஊரடங்கு வேலைக்கு ஆகாது – அமெரிக்காவை மீண்டும் திறக்க புதிய முறைகளை அறிவித்த டிரம்ப்
Next articleபுருஷனை கலாய்த்த பொண்டாட்டி: மாடர்ன் திருவள்ளுவரான சாந்தனு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here