Home நிகழ்வுகள் உலகம் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனாவிடம் நஷ்டஈடு கேட்போம், டிரம்ப்

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனாவிடம் நஷ்டஈடு கேட்போம், டிரம்ப்

308
0
சீனாவிடம் நஷ்டஈடு கேட்போம்

வாசிங்டன்: வுகான் நகரத்தில் இருந்து உலகம் முழுவதும் வைரஸை சீனா அலட்சியத்தால் பரப்பி உள்ளது, இதனால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு சீனாவிடம் நஷ்டஈடு கேட்போம் என திங்கட்கிழமை டிரம்ப் தெரிவித்தார்.

நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை

” நாங்கள் சீனாவால் சந்தோசமாக இல்லை”, என வெள்ளை மாளிகையில் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ” நாங்கள் இந்த மொத்த சூழ்நிலையினால் சந்தோசமாக இல்லை, ஏனென்றால் இதை ஆரம்பத்திலேயே சீனா தடுத்து இருக்கலாம்,

அப்படி ஆரம்ப நிலையிலேயே இந்த வைரஸை உடனடியாக பரவாமல் தடுத்திருந்தால் இது உலகம் முழுதும் பரவி இருக்காது”, என அவர் தெரிவித்தார்.

“நாங்கள் இந்த வைரஸ் பரவலை குறித்து தீவிர விசாரனை செய்து வருகிறோம்”,எனவும் அவர் தெரிவித்தார்.

ஜெர்மனி சீனாவிடம் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு 165 பில்லியன் டாலர்களை சீரமைப்பு பணிகளுக்கும் பொருளாதார இழப்புகளுக்கும் நஷ்டஈடாக கேட்டு உள்ளது.

இழப்பு அதிகம்

நாங்களும் இது போன்று வைரஸ் உண்டாக்கிய பாதிப்புகளுக்கு சீனாவிடம் நஷ்டஈடு கேட்போம், அது ஜெர்மனி கேட்ட தொகையை விட அதிக இருக்கும், எனவும்

இன்னும் நாங்கள் நஷ்டம் எவ்வளவு என்று கணக்கு செய்யவில்லை, மேலும் இங்கு 55,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்து உள்ளனர், 1 கோடிக்கும் மேலானோர் வேலை இழந்து உள்ளனர் மற்றும் பொருளாதார இழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது”, என டிரம்ப் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here