லண்டன்: யூகே உள்துறை அலுவலகம் விசா நடைமுறையில் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான விதிகளை தளர்த்த முடிவுசெய்துள்ளது,
இந்தியா உட்பட பல வெளிநாடுகளின் மருத்துவர்கள் இதனால் தங்களது நாட்டிற்கு உதவ முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வருபவர்கள் தங்களது நாட்டின் நேஷ்னல் ஹெல்த் சர்வீஸ்(NHS) உடன் இணைந்து கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் உதவுவார்கள்.
பிரித்தானிய மருத்துவ கூட்டமைப்பு (BMA), யுகேயில் உள்ள மருத்துவர்கனின் கூட்டமைப்பு இதுகுறித்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு யுகேயின் உள்துறை செயலாலர் ப்ரிட்டி பட்டேலுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவிலிருந்து மருத்துவ மேற்படிப்பு தேர்வுகளுக்காக பார்வையாளர் விசாவில் சென்று கொரோனா பரவலால் அங்கேயே சிக்கி கொண்ட மருத்துவர்கள், தாங்கள் இந்தியா திரும்ப முடியாததால் தங்களையும் அங்கு பணியாற்ற அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
“தான் டாக்டராக இருந்தும் தன்னால் இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாததை நினைக்கும் பொழுது மிகுந்த மனவேதனை அடைவதாக” டெல்லியிலிருந்து அங்கு சென்ற மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் “தான் அவசர கால சிகிச்சைகளில் பயிற்றுவிக்கப்பட்டவர்” என கூறினார்.