வாஷிங்டன்: சீனா இரகசியமாக அனுஆயுத பரிசோதனைகளை நிலத்துகடியில் (Under Ground Nuclear test) செய்திருக்கிறது என யூஎஸ் மாநில துறை புதன் கிழமை தெரிவித்தது.
சீனா அணுஅயுத சோதனை
இது சீனா மற்றும் யுஎஸ் இடையே பதற்றத்தை அதிகரிக்கும்.
இந்த தகவலை வால் ஸ்டிரீட் ஜர்னல் முதலில் தெரிவித்து இருந்தது, இது ஏற்கனவே சீன நகரமாகிய வுகானில் இருந்து கவனக்குறைவால் வெளிப்பட்ட கோவிட்-19 பரவல் ஏற்படுத்திய சீன–அமெரிக்க உரசலை மேலும் பெரிதாக்கும் என தெரிகிறது.
இந்த சோதனை சீனாவில் “லோப் நர்” என்னும் இடத்தில் அதிக ஆழமான குழி தோண்டுதல்கள் நடந்திருப்பதாகவும்,
வெளிப்படை அற்ற செயல்பாடுகள் இதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது எனவும் அமெரிக்க மாநில துறை(US state department) தெரிவித்தது.
1996ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட முழுமையான அணுகுண்டு சோதனைத்தடை உடன்பாடு(comprehensive Nuclear-Test-Ban Treaty, CTBT) இல் கைஎழுத்திட்டுள்ள நிலையில்
சீனா இந்த பரிசோதனையை நிலத்துக்கடியில் இரகசியமாக நிகழ்த்தியுள்ளது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை மறுத்து சீனாவின் வெளியுறவுத்துறை செயற்பாட்டாளர் சாவோ லிஜியன்(Zhao Lijian) அறிக்கை வெளியுட்டுள்ளார்
அதில் ” சீனா எப்போதும் சர்வதேச சட்டங்களை பின்பற்றி பொருப்பான நடத்தையையே பின்பற்றி வருகிறது“, எனவும்
“யூஎஸ்ஸின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரம் அற்றது மற்றும் இந்த குற்றச்சாட்டிற்க்கு மறுப்பு தெரிவித்தல் தேவை அற்றது ” எனவும் தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ்ஸின் பரவல் யுஎஸ்ஸில் அதிகமான மக்களை பாதித்துள்ள நிலையில் அமெரிக்க இத்தகைய குற்றச்சாட்டை சீனாவின் மீது சுமத்தியுள்ளது.