சீனா மற்றும் ரஷ்யாவை மிஞ்சும் புதிய அதிவேக ஏவுகணை ஒன்றை அமெரிக்கா உருவாக்கி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
17 மடங்கு வேகம் செல்லும் ஏவுகணை
ஒவல் அலுவலகத்தில் புதிய வின்வெளி படைக்கான கொடியை திறந்து வைத்து வெள்ளிகிழமை உரையாற்றிய ட்ரம்ப் “அமெரிக்க தற்போது நம்பமுடியாத மிகச்சிறந்த இராணுவ ஆயுதம் ஒன்றை தயார் செய்து வருகிறது, அதில் 17 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகனையும் அடங்கும்” என தெரிவித்தார்.
ஏற்கனவே எங்களிடம் உள்ளது: இரஷ்யா
இதற்கு பதில் தரும் வகையில் இரஷ்ய அதிபர் புதின் தெரிவிக்கையில், தங்களிடம் ஏற்கனவே ஹைபர் சானிக் அனு ஏவுகணை பயண்பாட்டில் உள்ளதாகவும், அதைதான் இப்போது அமெரிக்கா தற்போது தயாரித்து வருவதாகவும் கூறினார்.
இது குறித்து இரஷ்ய செய்தி நிறுவனம் “இரஷ்யாவிடம் ஒலியை விட 20 மடங்கு அதிக வேகத்தில் எரிகல்லை போல் செல்லக்கூடிய ஏவுகணைகள் உள்ளன” என தெரிவித்தது.
வின்வெளி ஆதிக்கம்
கடந்த டிசம்பர் மாதம், அதிபர் ட்ரம்ப் வின்வெளியில் ஆதிக்கக் செலுத்தும் வகையில், வின்வெளி படை குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார்.