Home நிகழ்வுகள் உலகம் கொரோனா பாதித்தவர்களை கொரோனா மீண்டும் தாக்கக்கூடும்: உலக சுகாதார அமைப்பு

கொரோனா பாதித்தவர்களை கொரோனா மீண்டும் தாக்கக்கூடும்: உலக சுகாதார அமைப்பு

267
0
கொரோனா மீண்டும் தாக்கக்கூடும்

கொரோனா பாதித்தவர்களை கொரோனா மீண்டும் தாக்கக்கூடும். எனவே, கொரோனா நோயாளிகள் குணமடைந்த பின்பு வேலைக்கு செல்வது என்பது பேராபத்தை உண்டாக்கும். என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

“கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அந்த நோயை தாங்கும் எதிர்ப்பாற்றல் உள்ளது என்பது நிரூபனம் செய்யப்படவில்லை,  எனவே இந்நோய் அவர்களை மீண்டும் தாக்கலாம்”, என உலக ஐக்கிய நாடுகளின் அமைப்பு ஏப்ரலில் தெரிவித்தது.

எதிர்ப்பாற்றல் கடவுச்சீட்டு என்பது ஆபத்தான திட்டம்

சில அரசுகள் கொரோனாவால் பாதித்து மீண்டவர்களை “எதிர்ப்பாற்றல் கடவுச்சீட்டு”(Immunity Passport) அல்லது “ஆபத்து அற்றவர்கள் சான்று” (Risk-free certificate)கொடுக்கலாம், அதனால் அவர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என பரிந்துரைத்ததை அடுத்து உலக சுகாதார அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.

அவ்வாறு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் வேலைக்காகவோ அல்லது வெளியிடங்களில் சுற்றினாலோ பரவலை மேலும் அதிகமாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியது.

தடுப்பூசி தேவை

கொரோனாவிற்க்கான தடுப்பூசி தேவை உலக அளவில் தேவைப்படுவதை அடுத்து, அவ்வாறு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் உலகில் உள்ள அனைவருக்கும் அது பரவலாக கிடைக்க உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை அமைத்துள்ளது இதில் பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மக்ரொன், ஐரோப்பிய ஆனைய அதிபர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் உறுப்பினர்களாக செயல் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleநாய்க்கு பிரபாகரன் பெயர்: துல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை!
Next articleஉடைந்த கண்ணாடி: சன்னி லியோன் வரைந்த ஓவியம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here