Home அரசியல் டெல்லி போன்று கலவர பூமியாக மாற்றப்பார்க்கிறார் ஸ்டாலின் – இபிஎஸ்

டெல்லி போன்று கலவர பூமியாக மாற்றப்பார்க்கிறார் ஸ்டாலின் – இபிஎஸ்

407
0
கலவர பூமியாக

அமைதிப்பூங்காவான தமிழகத்தை டெல்லி போன்று கலவர பூமியாக மாற்றப்பார்க்கிறார் ஸ்டாலின் என இபிஎஸ் குற்றம் சுமத்தி உள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் என்.பி.ஆர் குறித்து பேசியிருந்தார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இன்னும் மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்கவில்லை.

இதன் காரணமாகவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

உடனே, இது தொடர்பாக ஸ்டாலின் என்பிஆர் நிறுத்தப்பட்டது தொடர்பாக சட்டசபையில் அறிவிக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, என்.பி.ஆர். விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் ஸ்டாலின் அச்சத்தை உண்டு செய்ய நினைக்கிறார்.

அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தை டெல்லி போன்று கலவர பூமியாக மாற்றப்பார்க்கிறார் ஸ்டாலின் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here