அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் – டெல்லி தேர்தல் இறுதிகட்ட அனல் பறக்கும் பிரச்சாரம்.
டெல்லி தேர்தல் 2020
தலைநகர் டெல்லியில் வருகிற 8 தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம்
இதனிடையே நேற்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மீ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை பொது விவாதம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்திருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்ட சபை தேர்தலில் இந்த முறை எந்த தேர்தலிலும் இல்லாதவகையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் மக்களுக்கு பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி அண்மையில் நிறைவேற்ற பட்ட குடியுரிமை சட்ட திருத்தமும் இந்த தேர்தலில் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.
அமித்ஷாவுக்கு அழைப்பு
இதற்கிடையேதான் நேற்று தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் உரையாற்றிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இலவச திட்டங்களை விமர்ச்சிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பொது கூட்டத்தில் விவாதம் செய்ய தயார் என அறிவித்துள்ளார்.
மேலும் அவர் அமித்ஷாவிடம் டெல்லி வளர்ச்சிக்காக பாஜக கடந்த ஐந்து வருடத்தில் செய்த திட்டங்களை கூற முடியுமா எனவும் வினவியுள்ளார்.
மேலும் குடியுரிமை சட்டதிருத்தத்தின் மூலம் பொது அமைதியை உள்துறை அமைச்சர் அமித்ஷா சீர்குலைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி காவி கூட்டம் ஏன் இலவச திட்டங்களை எதிர்க்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் .
மேலும் பேசிய அவர் டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் சாலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த இரண்டு மாத காலமாக போராடி வருபவர்களை கண்டு கொள்ளாதது ஏன் எனவும் வினவியுள்ளார்.
இதன் மூலம் பாஜக மிகவும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாக விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி மக்கள் கடந்த ஐந்து வருடத்தில் பிஜேபி கட்சி தங்களின் நலனுக்காக என்ன செய்தது என கேட்பதாகவும் தெரிவித்துள்ளார், அதுமட்டுமின்றி தங்கள் கட்சி வெற்றி பெற்றால் தாம்தான் முதலமைச்சர் எனவும் மாறாக பாஜக வெற்றி பெற்றால் யாரை முதல்வர் ஆக்குவார் எனவும் வினவியுள்ளார்.
மேலும் டெல்லி மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார், கடந்த செவ்வாய் கிழமை பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று மாலைக்குள் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவியுங்கள் என சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
கருத்துக் கணிப்பு முடிவுகள்
இதனிடையே பிரபல ஊடகங்கள் மற்றும் கருத்து கணிப்பு நடத்தும் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.
மேலும் பல்வேறு இணைய தளங்களும் இதனையே வெளிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரம் நிறைவு
இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஐந்து மணியுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, குடியுரிமை சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடை பெற்று வருவதால் வாக்குப்பதிவின்போது ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்க துணை ராணுவம் களம் திறக்கப்பட்டுள்ளது.