இன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
வெளிநாடு சென்று திரும்பிய பணக்காரர்கள் தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை.
கொரோனா பணக்காரர்களின் நோய். ஏழைகளை ஒருநாளும் பாதிக்காது.
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1267 ஆக உயர்வு.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் கொரோனா தொற்று யாருக்கும் இருக்காது.
இன்னும் 15 நாட்களில் கொரோனா பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும்.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் .
தமிழக அரசின் முயற்சிகளால் கொரோனா தொற்று இல்லாத நிலை விரைவில் தமிழகத்தில் உருவாகும்.
கொரோனாவை தடுப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற திமுக எம்பிக்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
அரசு எடுத்து வரும் சிறப்பான கொரோனா தடுப்பு பணிகளுக்கு, எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். தமிழகத்தில் மட்டும்தான் கொரோனா வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.
புயல், சுனாமி வந்தாலும் கூட மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்.
காய்கறி விலை உயர்ந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறானது. காய்கறி மலிவு விலைகளிலேயே விற்கப்படுகிறது.
பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்.