Home Latest News Tamil தந்தையை தோளில் சுமந்த மகன்

தந்தையை தோளில் சுமந்த மகன்

254
0

“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்” இந்த குறளுக்கு எடுத்துக் காட்டாய் தந்தையை தோளில் ஒரு கிலோமீட்டர் சுமந்து சென்ற மகன்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் காரணமாக உலகமே ஊரடங்கில் இருந்து வருகிறது.

இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்திய சுகாதாரத்துறை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறது. பிரதமர் மோடி அறிவித்த படி 21 நாள் ஊரடங்கு முடியும் தருவாயில் 40 நாளாக மாற்றினார்.

மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் தான் நாடு இருக்கும் என்றும் அறிவித்தார்.

மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்தியாவில் காவல்துறையினரும் மருத்துவரும் அயராது கொரோனாவை ஒழிக்க பாடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கேரளாவிலுள்ள கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இவர் நான்கு நாட்களுக்கு முன் புனலூர் தாலுகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல் சரியானதும் டாக்டர்கள் அவரை வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர்.

அவர் வீட்டுக்கு செல்ல அவருடைய மகன் ஆட்டோ ரிக்ஷாவில் வந்து இருக்கிறார். அப்போது காவலர்கள் அவரது வாகனத்தை மறைத்து அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

தன் தந்தை மருத்துவமனையில் இருப்பதையும், அவரை அழைத்துச் செல்ல சென்று கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லியும் காவலர்கள் அவரின் வாகனத்தை அனுமதிக்கவில்லை.

உடனே ஆட்டோ ரிக்ஷாவை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தன் தந்தையை தோளில் தூக்கியபடியே வந்திருக்கிறார்.

இவர் நடந்து செல்லும் போது ஒருவர் எடுத்த வீடியோ கேரளாவில் உள்ள செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவலரின் இந்த செயலை கண்டித்து சமூக வலைத்தளத்தில் காவலர்களுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர் .

இதனால் கேரளா காவல் துறைக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இது குறித்து காவல்துறையில் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் பல மக்கள் சுற்றித்திரிந்து வருகிறார்கள்.

அதனால் சாலைகளில் வாகன நெருக்கடியும் ஏற்படுகிறதுநெருக்கடியும் ஏற்படுகிறது.

அந்த ஆட்டோ ரிக்ஷாவை நிறுத்திய காவலர் அவரிடம் ‘எதற்காக சாலைகள் சுற்றுகிறார்கள்’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த முதியவரின் மகன் தன் தந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்வதற்கான எந்த ஒரு மருத்துவர் சான்றுகளின் அவர் காவலர்களிடம் காட்டவில்லை.

அவர் அப்படி ஆவணங்களை காட்டி இருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

இருப்பினும் இதுகுறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

தற்போது மனித உரிமை ஆணையம் கேரள அரசுக்கும் மற்றும் கேரள போலீசுக்கும் இது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த சம்பவம் கேரளாவில் மிகப்பெரிய அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

Previous articleகொரோனா பணக்காரர்களின் நோய் – முதல்வர் பழனிசாமி
Next articleசினிமா விநியோகஸ்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here