Raghava Lawrence; சினிமா விநியோகஸ்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி! கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சினிமா விநியோகஸ்தர்களுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
சினிமா விநியோகஸ்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நிதி திரட்டி வருகிறார். சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
அதில், பிரதமர் நிவாரண் நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லடசம், நடனக் கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம், ராயபுரம் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.75 லட்சம் என்று வழங்கியுள்ளார்.
சமீபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், சினிமா விநியோகஸ்தர்களுக்கு உதவும் வகையில் ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார்.