Home அரசியல் கொரோனா இருப்பதால் கருணாநிதி பிறந்த நாளில் திமுக பொதுக்கூட்டம் இல்லை

கொரோனா இருப்பதால் கருணாநிதி பிறந்த நாளில் திமுக பொதுக்கூட்டம் இல்லை

கருணாநிதி

சென்னை: திமுக முன்னால் தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி வரும் நிலையில் கொரோனா பரவல் இருப்பதால் கூட்டங்களை தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய திமுக முடிவு.

ஏழை மக்களுக்கு உதவி

கொரோனா பரவல் உள்ள நிலையில் தற்போதய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏழை மக்களுக்கு முகமூடி, கிருமி நாசினி, மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது,

மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் பணம் தேவைப்படுபவர்களுக்கு பணம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிகிறது.

கருணாநிதி தனது நேரத்தை தமிழக மக்களுக்காகவும் செலவிட்டவர்

“கருணாநிதி அவர்கள் உயிருடன் இருக்கையில் தனது நேரத்தை தமிழ்நாட்டிற்காகவும் தமிழக மக்களுக்காகவும் செலவிட்டார். அது போல் திமுகா வும் ஜூன் 3 இல் அவர் நினைவாக கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும்,” என ஸ்டாலின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த வருடம் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களுடன் பெரிய அளவில் நடந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here