ஜெயலலிதா சிறை; குன்ஹா தீர்ப்பு – காரணம் க.அன்பழகன். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா தப்ப முடியாமல் போனதற்கு கரணம் அன்பழகன் தொடுத்த வழக்கு.
அன்பழகன் காலமானார்
திமுக கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக 98 வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை வலியுறித்தி உள்ளார்.
ஜெயலலிதா சிறை
ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை 1996-ல் தொடுத்தவர் சுப்ரமணியம் சுவாமி. இந்த வழக்கு தமிழக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீண்ட வருடமாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்பிவிடக்கூடாது என வழக்கை பெங்களூரு நீதிமன்றத்திற்கு மற்ற வேண்டும் என அன்பழகன் வழக்கு தொடுத்தார்.
2003-ஆம் உச்ச நீதிமன்றத்தில் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார். இதன் காரணமாகவே ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
நீதிபதி குன்ஹா வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தைரியமாக வழங்கினார். தீர்ப்பு வழங்கிய உடனேயே ஜெயலலிதா அக்ரஹாரம் சிறைக்கு அனுப்பப்பட்டார்.