லிப்ட் அருகில் இருக்கும் கண்ணாடி இதற்குத்தானா?
ஒவ்வொரு முறையும் நீங்கள் லிப்டில் ஏறும்போதும், இறங்கும்போதும் அதன் அருகே இருக்கும் கண்ணாடியைக் கவனித்தது உண்டா?
ஒவ்வொரு மாடியிலும், லிப்டுக்கு அருகே ஒரு கண்ணாடி இருக்கும். அது ஏன் எனத் தெரிந்துகொள்ள 100 வருடங்கள் பின்நோக்கி செல்லவேண்டும்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, வீரர்கள் எலவேட்டரை பயன்படுத்துவதில் பெரிய நெருக்கடி ஏற்பட்டது.
நீண்ட நேரம் லிப்டில் பயணிக்கவும் காக்கவும் வேண்டியிருந்தது. இதற்கு ஒரு முடிவுகட்டவே கண்ணாடிகள் பொருத்தப்பட்டன.
கண்ணாடிக்கும், காத்திருப்பிற்கும் என்ன சம்பந்தம்?
பொதுவாக அனைவரும் எந்த ஒரு செயலுக்காகவும் நீண்ட நேரம் காத்திருப்பதை விரும்புவதில்லை.
எனவே, காத்திருக்கும் நேரத்தில் வேறு ஏதாவது ஒருசெயலைச் செய்துகொண்டிருந்தால் நேரம் கழிவதே தெரியாது.
இதற்காகவே லிப்ட் அருகில் கண்ணாடியைப் பொருத்தியுள்ளனர். கண்ணாடி அங்கு இருப்பதால், முகம் பார்க்கின்றனர். பெண்கள் மேக்கப் செய்து கொள்கின்றனர்.
நீண்ட நேரம் முகத்தைப் பார்த்து ரசிப்பவர்களும் உண்டு. தலைமுடி அலங்கோலமாக இருந்தால் உடனே சரி செய்துகொண்டு அலுவலகத்திற்குள் நுழைய முடியும்.
நம் அருகில் உள்ள நபரை, நேருக்குநேராக நோக்காமல் கண்ணாடி வழியே பார்க்க முடியும். இதனால் காதல் மலருவதற்கும் வாய்ப்புண்டு.
அதேபோன்று, இளம் ஜோடிகள் கசமுசா செயலில் ஈடுபட நினைத்தால் அருகில் உள்ள நபருக்கு கண்ணாடி காட்டிக்கொடுத்துவிடும்.
ஒரு கண்ணாடியில் இப்படி பலவசதி உள்ளதை அறிந்தே அன்றே கண்ணாடியைப் பொருத்தியுள்ளனர்.