Indian Borders: இந்தியாவின் எல்லைகள் பற்றி தெரியுமா? இந்திய எல்லை எத்தனை நாடுகளுடன் இணைந்து உள்ளது. இந்திய எல்லை மொத்த நீளம் எவ்வளவு? மொத்த பரப்பளவு?
இந்தியா தனது எல்லையை மற்ற நாடுகளுடனும் பகிந்து கொண்டுள்ளது. அவை முறையே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் வங்கதேசம். வங்கதேசத்துடன் தான் இந்தியா மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மொத்த பரப்பளவு
பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட நாடுகளில் இந்தியா 7ம் இடம் வகிக்கிறது. இந்தியாவின் மொத்த பரப்பளவு 3,287 மில்லியன் கிலோ மீட்டர். கடற்கரையின் நீளம் 7,517கிமீ (4,700மைல்).
இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் பட்டியல்
இந்தியா தனது எல்லையை பகிர்ந்து கொள்ளும் மிகப்பெரிய நாடு சீனா. இந்தியா மிக நீளமான தொலைவு எல்லையைப் பகிர்ந்து கொண்ட நாடு வங்கதேசம். மிகச்சிறிய நாடு பூடான்.
பரப்பளவில் மிகக்குறைந்த எல்லையை கொண்டுள்ள நாடு ஆப்கானிஸ்தான். மிக அதிக நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலம் ஜம்மு-காஷ்மீர்.
அதிக மாநிலங்களுடன் எல்லையைப் பகிந்து கொள்வது உத்திரப்பிரதேசம் எட்டு மாநிலங்களோடு தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இந்தியாவின் நிலப்பரப்பு எல்லைகள் Indian borders
பங்களாதேஷ் – இந்தியா எல்லை
பங்களாதேஷ் – இந்தியா எல்லை. வங்கதேசம், இந்தியா இடையேயான எல்லை சர்வதேச எல்லை (ஐபி) ஆகும். இதில் இரு நாடுகளும் 4,096 கிலோ மீட்டர் நீளத்தை (2.545mi) பகிர்ந்து கொள்கின்றன.
உலகின் 5-வது மிக நீளமான எல்லையாகும். இருபுறமும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது எல்லை பாதுகாப்பு படையின் கவனிப்பில் உள்ளது.
பூடான் – இந்தியா எல்லை
பூடான் – இந்தியா எல்லை 699 கிலோமீட்டர் தூரத்தை (434mi) பகிர்ந்து கொள்கின்றன. இந்தியத் துணை ராணுவப் படை எஸ்எஸ்பி (sashastra seema bal) பாதுகாப்பில் உள்ளது.
சீனா – இந்தியா எல்லை
சீனா – இந்தியா எல்லை. இந்தியா, சைனா 3,488 கிலோமீட்டர் (2.167mi) நீள நிலப்பரப்பை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன.
மக்மோகன் எல்லைக்கோடு தான் இரு நாட்டிற்கும் வரையறையாகும். இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் உள்ளது. மிகப் பிரச்சனை வாய்ந்த எல்லைக்கோடு இது மட்டுமே.
மியான்மர் – இந்தியா எல்லை
மியான்மர் – இந்தியா எல்லை. தங்களுக்குள் 1,643 கிலோமீட்டர் (1.021mi) நீளத்தை பகிர்ந்து கொள்கின்றன. அசாம் ரைபில்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ளது.
நேபாளம் – இந்தியா எல்லை
நேபாளம் – இந்தியா எல்லை. இந்தியா மற்றும் நேபாளம் 1.751 கிலோமீட்டர் நீளத்தை பகிர்கின்றன. இந்திய துணை ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ளது.
பாகிஸ்தான் – இந்தியா எல்லை
பாகிஸ்தான் – இந்தியா எல்லை மிகச் சர்ச்சைக்குரியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் 3,323 கிலோமீட்டர் (2.065mi) நீளத்தை பகிர்ந்து கொள்கின்றன.
எல்லைப்பாதுகாப்பு படையின் கண்காணிப்பில் உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான எல்லைக்கோடு சர்கிரில் ரெட் கிளிப், இது சர்வதேச எல்லைக்கோடு ஆகும்.
உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்
உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை
உலகின் நீளமான கடற்கரைகள் டாப் 10 பட்டியல்