Home Latest News Tamil மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு! ஏன் நடக்கிறது?

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு! ஏன் நடக்கிறது?

1
2939
மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு! மேல்மலையனூர் கோயில் தல வரலாறு! அங்காளம்மன் வழிபாட்டின் சிறப்புகள் என்ன? மாயான கொள்ளை விழா எப்படி உருவானது?

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு மேல்மலையனூர் கோயில் தல

சக்தி வழிபாடனது நம் தமிழர்களின் பழமையான வழிபாடாகும். கொற்றவை (காளி) பாலை நில கடவுளாகவும், போர் தெய்வமாகவும் கருதப்பட்டு வழிப்பட்டு வந்தனர்.

இந்த நவீன காலத்திலும் பழமை மாறாமல் மாசி மாதம் வந்தாளே எங்கு பார்ப்பினும் விண் அதிர பம்பை மற்றும் உடுக்கை ஓசையும், பாடல்களும் ஒலித்து கொண்டு இருக்கும்.

அஷ்ட திக்கினையும் கட்டி ஆளும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி அன்னை அங்காள பரமேஸ்வரிக்கு திருவிழா எடுக்கும் சிறப்பான மாதமே மாசி மாதம் ஆகும்.

எவ்வாறு அங்காளி மலையனூரில் குடி கொண்டாள் மற்றும் மயான கொள்ளை ஏன் நடத்தப்படுகிறது? அதன் சிறப்பு என்ன? என்பதனை காண்போம்.

மேல்மலையனூர் கோயில் தல வரலாறு

மாயான கொள்ளை விழா எப்படி உருவானது?

மாயான கொள்ளை விழா எப்படி உருவானது? மேல்மலையனூர் கோயில் தல வரலாறு

பிரம்மனின் ஆணவத்தை அழிக்க பரமேஸ்வரன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டினார். இதனால் பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றி கொண்டது.

பிரம்மனின் ஐந்தாவது தலை சிவனின் கரத்தில் பிரம்ம கபாலமாக ஒட்டி கொண்டது.

சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். பார்வதியும் சிவனின்றி அகோர ரூபம் கொண்டு ஆவேசமாக சுற்றி திரிந்தார்.

இறுதியில் அன்னை மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.

சிவன் பிச்சையெடுக்கும் உணவனைத்தையும் அந்த பிரம்ம கபாலம் உண்டு பசியோடு சக்தியற்று அலைய வைத்தது.

இறுதியில் பரமேஸ்வரி வாழ்ந்து வந்த மயான பூமிக்கு வந்து சேர்ந்தார். மகா விஷ்ணுவின் அலோசனைப்படி உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவனுக்கு உணவு சமைத்தாள்.

பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள்.

முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது.

மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினால். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது.

ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள்.

மாயான கொள்ளை விழா எப்படி உருவானது?

அங்காளியாக மயான பூமியில் ஆவேச நடனம் புரிந்தாள். அவளை சாந்த படுத்தவே இயலவில்லை. ஆடிய ஆட்டத்தில் அகிலமே அதிர்ந்து அஞ்சின.

அன்னை பார்த்த அனைத்தும் அவள் கோப பார்வையில் பட்டு அழித்தன. தேவர்களும் பயந்து நடுங்கினர்.

போர் கோலம் பூண்டு தேரில் ஏறிப் பயணித்தாள். அம்பிகையை சாந்தப் படுத்த தேரின் அச்சாணியை மகா விஷ்ணு முறியச்செய்தார்.

தேர் உடைந்து அன்னை கீழே மல்லார்ந்தாள். மகா விஷ்ணு தனது தங்கையை தனது சக்தியால் அப்படியே கட்டுப்படுத்தினார்.

அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.

அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறுஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது (mayna kollai) நடைபெறுகிறது.

அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டதாள். மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றாள் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.

அங்காளம்மன் வழிபாட்டின் சிறப்புகள் என்ன?

காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டவர்கள் ஆவேசமாக ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர்.

அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்புகின்றனர்.

2020 இல் மயான கொள்ளை

இந்த ஆண்டு அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் பிப்ரவரி 23-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.

சிவராத்திரி இரவிலிருந்தே திருவிழாத் துவங்குகிறது. பின் அம்மன் கண்திறப்பு, இரத்த பலி வீசுதல், அமாவாசை மதியம் மயான கொள்ளை, ஊஞ்சல் சேவை, விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

மாசி அமாவாசையில் அம்பிகை முழு சக்தி பலத்தோடு வீற்றிருப்பாள். அன்றைய தினம் சென்று அகில உலக நாயகியான அங்காள பரமேஸ்வரியை சென்று தரிசித்து வேண்டிய நலன்களைப் பெறுவோம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here