Home ஆன்மிகம் கதையல்ல உண்மை: பெண்ணின் பிறப்புறுப்பை அம்மனாக வணங்கும் அதிசய கோவில்!

கதையல்ல உண்மை: பெண்ணின் பிறப்புறுப்பை அம்மனாக வணங்கும் அதிசய கோவில்!

19816
0

யோனி பீடம்: அம்பிகையின் யோனி பாகம் விழுந்த இடம், வருடதிற்கு ஒருமுறை மாதவிலக்கில் மூடப்படும் கருவறை, மாதவிலக்கில் தேவியின் யோனி பாகத்தில் வடியும் உதிரம்.

இந்திய தேசத்தில் பல சக்தி திருத்தலங்கள் இருப்பினும். அம்பிகையின் உடல் உறுப்புகள் விழுந்ததாக கருதப்படும் ஐம்பத்தி ஒன்று சக்தி பீடங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

காமாக்யா தேவி வரலாறு

தட்சனின் மகளாக அம்பிகை அவதரித்து தாட்சாயணி என்ற நாமம் கொண்டாள். சிவனை எண்ணி தவம் புரிந்து தன் தந்தைக்கு விருப்பமின்றி சிவனை மணந்தாள்.

சிவனின் கட்டளையை மீறி தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டு தட்சனால் அவமதிக்கப்பட்டாள்.

இதனால் கோபம் கொண்டு யாகத்தை அழித்து அந்த யாகத்தீயில் அம்பிகை இறங்கினாள். இதனால் கோபம் கொண்ட சிவன் வீரபத்திரர் அவதாரம் கொண்டு தட்சனை அழித்தார்.

பின் தீயில் இறந்த அம்பிகையின் உடலை தூக்கி ஊழிதாண்டவம் ஆடினார். நிற்காத தாண்டவத்தை கண்டு அனைவரும் அஞ்சினர்.

இதனால் அம்பிகையின் உடல் இருக்கும் வரை தாண்டவம் நிற்காது என அறிந்த திருமால் சக்கராயுதம் ஏவி அம்பிகையின் உடல் பாகத்தை சிதைத்தார்.

அந்த உடல் 51 பாகங்களாக துண்டுபட்டு பாரத தேசத்தில் 51 இடங்களில் விழுந்தது. அதுவே 51 சக்தி பீடங்கள் ஆகும்.

இந்த வகையில் அம்பிகையின் யோனி பாகம் (பிறப்புறுப்பு) விழுந்த இடமே காமாக்யா சக்தி பீடம் ஆகும்.

தேவி காமாக்யா ஆலயம்

அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நீலாச்சல் பர்வதத்தில் அமைந்துள்ளது காமாக்யா தேவி ஆலயம்.

ஒரு குகை போன்று பாறையை குடைந்து அமைந்துள்ள கருவறையின் பீடத்தில் பாறையில் யோனி போன்ற வடிவம் உள்ளது. அம்பிகைக்கு உருவம் கிடையாது. இந்த யோனியே காமாக்யா தேவி ஆவாள்.

பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள அழகான திருக்கோவில். இங்கே சாக்த தாந்திரீக முறைப்படி பூசைகள் நடைபெறுகிறது.

பலியிடும் வழக்கமும் இக்கோவிலில் உள்ளது. தினமும் காலையில் ஒரு ஆடு பலியிடுகின்றனர். அதன் பிறகே பூசைகள் நடக்கும்.

மேலும் மந்திர, தந்திரம் கற்கும் தாந்திரீகர்கள் இங்கே வந்து தான் கற்ற துவங்குகின்றனர். மிகவும் சக்தி மிகுந்த அம்பிகையாவாள் காமாக்யா தேவி.

இங்கே தசமகா வித்யா தேவியர்கள் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா விற்கான சன்னதிகள் காமாக்யா கோவிலின் உள்ளேயே உள்ளது.

மற்ற ஏழு வித்யாகளுக்கு தனித்தனி இடங்களில் கோவில்கள் நீலாச்சல் மலையில் அமைந்துள்ளன.

அசாமை ஆண்ட மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டு கி.பி. 1665-இல் புதுப்பிக்கப்பட்டது. வெளிபுறத்தில் கோவில் போலவும் உட்பகுதியில் பாதாள குகை போன்றும் இருக்கும்.

கருவறையில் பாறையில் உள்ள யோனிபீடமே காமாக்யா தேவியாவாள். யோனியில் இருந்து வடியும் நீரே தீர்த்தமாக வழங்கப்படும்.

அம்பிகையின் மாதவிலக்கு காலம்

காமாக்யா தேவிக்கு மாதம் நான்கு நாட்கள் மாதவிலக்கு என்று யோனி பீடம் சிவப்பு துணியால் மூடப்படுகிறது.

ஆனி மாதத்தில் மட்டும் மூன்று நாட்கள் மாத விலக்கு காலத்தில் கருவறை மூடி வைக்கப்படும். அந்த காலத்தில் ஆண்கள் யாருக்கும் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

அந்த சமயத்தில் யோனியில் இருந்து வடியும் நீர் சிவப்பு நிற உதிரம் போல் வடியுமாம். இதுவே மிகவும் அதிசய நிகழ்வாகும். அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதியே சிகப்பாகி விடும் என்கின்றனர்.

இந்த காலத்தில் அம்பிகையை பூசித்தால் பல்வேறு சக்திகள் கிடைக்கும் என்று கோவிலை சுற்றி பல தாந்தரீகளும், சாக்த மற்றும் ஸ்ரீ வித்யா உபாசகர்களும் பல்வேறு பூசைகள் நடத்தியும், தவமும் புரிவார்கள்.

இந்த மூன்று நாட்கள் முடிந்த பிறகே நடைதிறக்கப்படும். இந்த அம்பிகைக்கு உகந்த மலர் “செம்பருத்தி “ ஆகும். 108 செம்பருத்தி மலர்களால் மாலை அணிவிப்பது மிகவும் சிறப்பாகும்.

இங்கே விநாயகர், சிவன், திருமால், சன்னதிகளும் உள்ளது. மகாபாரதத்தில் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வத்தில் இக்கோவிலைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

காளிகா புராணம், தேவி மகாத்மியம், யோகினி தந்திரம், காமாக்யா தந்திரத்தில் விரிவாக இக்கோவிலை பற்றி கூறப்படுகிறது.

எல்லா வளமும் அருள்வாள் காமாக்யா

இக்கோவிலில் “அம்புபச்சி திருவிழா” மிகவும் பிரசித்தம். துர்கா பூஜை, மனாஷா பூஜை, நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு கும்ப மேளா போல் நாகா சாதுக்கள் அம்புபச்சி திருவிழாவில் குவிகின்றனர்.

இக்கோவில் தாந்திரீகவாதிகளுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் வேண்டிய வரம் அருள்பவளாய் உள்ளார் தேவி காமாக்யா. அனைவரும் காமாக்யா தேவியை வணங்கி நல்வாழ்வினை பெறுவோம்.

அமைவிடம்: அசாம் கவுகாத்தியில் நீலாசல் மலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Previous articleஇந்தியாவில் கொரோனா தொற்று 56,342 ஐ தாண்டியது
Next articleMoney Heist Professor: பொருத்தமான நடிகர் விஜய் மட்டும் தாங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here