Home ஆன்மிகம் நரசிம்மர் ஜெயந்தி 2020: நகங்களில் இரத்த கரையுடன் காட்சி தரும் நரசிம்மர் கோவில்!

நரசிம்மர் ஜெயந்தி 2020: நகங்களில் இரத்த கரையுடன் காட்சி தரும் நரசிம்மர் கோவில்!

676
1

நரசிம்மர் ஜெயந்தி 2020 (Narasimha Jayanti 2020): பிரகல்நாதனை காத்த நரசிம்மர், இன்றும் நகங்களில் இரத்த கரையுடன் இருக்கும் நரசிம்மர், பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் கோவில்.

உலகில் அரக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து மக்களுக்கு துன்பங்கள் ஏற்படும் போது ஸ்ரீ மகா விஷ்ணு பூவுலகில் அவதாரம் செய்து மக்களை காத்து வருகிறார் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

ஒவ்வொரு யுகத்திலும் அதர்மம் தலை தூக்கும் போது ஒவ்வொரு அவதாரங்களை எடுப்பார்.

அப்படி தனது பக்தனான பிரகல்நாதனை காக்க அனைத்து இடங்களிலும் தான் இருப்பதை உணர்த்த பரந்தாமன் எடுத்த நான்காம் அவதாரமே “நரசிம்ம அவதாரம்” ஆகும்.

பிரகல்நாதனை காக்க வந்த நரசிம்மர்

சத்யுகத்தில் காஸ்சியப முனிவருக்கும், அதிதி தேவிக்கும் மகன்களாக பிறந்த அரக்கர்களே இரண்யாக்சன் மற்றும் இரண்யகசிபு ஆவர்.

வராக அவதாரத்தில் திருமால் வராகமூர்த்தி அவதாரம் எடுத்து இரண்யாக்சனை வதைத்து பூமியை காத்தார்.

தன் அண்ணனை கொன்றதால் மகா விஷ்ணு மீது பயங்கர வஞ்சம் கொண்டான் இரண்யன்.

பிரம்மாவை நோக்கி தவம் புரிந்து தனக்கு மனிதர்கள், தேவர்கள், பறவைகள், விலங்குகளாலும், வீட்டின் உள்ளே அல்லது வெளியிலும், வானம் அல்லது பூமியிலும், இரவு அல்லது பகலிலும் மற்றும் எந்த வித ஆயுதங்களாலும் மரணம் வரக்கூடாது என்ற வரத்தை பெற்றான்.

அதனை தொடர்ந்து தன்னையே கடவுளாக வணங்க வேண்டும் என்று மக்களையும், தேவர்களையும், ரிஷி, முனிகளையும் துன்புறுத்தி வந்தான்.

இரண்யகசிபுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தான். அவனே பிரகல்நாதன் ஆவான். பிறக்கும் போதிலிருந்தே நாராயண மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தான்.

இதனால் அவன் மீது பயங்கர கோபம் கொண்ட இரண்யன் மகனென்றும் பாராமல் பல துன்பங்கள் அழித்தான் கொல்லவும் துணிந்தான்.

ஒரு நாள் பகல், இரவு அல்லாத அந்திசாயும் வேலையில் பிரகல்நாதனிடம் உன் நாரயணன் எங்கு இருக்கிறார் என கேட்க.

குழந்தையும் அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூற இந்த தூணில் இருக்கிறானா என்று கேட்டு அருகில் இருந்த தூணை கதையால் அடித்தான்.

தூணை பிழந்து கொண்டு மனிதன், மிருகம் இரண்டும் கலந்த நரசிங்க மூர்த்தியாக உக்கிரமாக வெளியே வந்தார்.

வீட்டிலும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் வாசற்காலில் அமர்ந்து, வானும் பூமியும் இல்லாமல் தன் மடியில் அவனை கிடத்தி எவ்வித ஆயுதமும் இல்லாமல் தன் வஜ்ர நகத்தினால் இரண்யனை நரசிங்க மூர்த்தி பிளந்தார்.

தன் பரம பக்தனான பிரகல்நாதனையும், மக்களையும் நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் புரிந்து காத்தார் மகா விஷ்ணு.

இன்றும் இரத்த கரையுடன் உள்ள நரசிம்மர்! (narasimma temple)

நாமக்கல் மாநகரில் அமைந்துள்ள மலை குன்றின் மீது அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில். இரண்யனை வதைத்து உக்கிரம் தாங்காமல் இருந்த நரசிம்மர் குழந்தை பிரகல்நாதனை வேண்டுதலுக்கு இணங்கி சாந்தமடைந்தார்.

கண்டகி நதிக்கரையில் சாளகிராம மூர்த்தியாக அமர்ந்தார்.
இதனால் கணவனை பிரிந்த மகாலட்சுமி இங்கே கமலாலயம் எனும் தாமரை தடாகத்தின் அருகில் அமர்ந்து தவம் புரிந்தார்.

சஞ்சீவி மலையை தூக்கி கொண்டு வந்த அனுமன் இந்த நரசிம்மரையும் தூக்கி வந்தார். இந்த தடாகத்தின் அருகில் வைத்து விட்டு தடாகத்தில் நீர் அருந்த சென்றார்.

திரும்பி வந்து தூக்க இயலாமல் இங்கயே நிலைத்து நின்றார் நரசிம்மர். இங்கே தவம் புரிந்த மகாலட்சுமிக்கும் காட்சி அளித்தார்.

கோவிலில் மேற்கு புரம் நோக்கி  லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார். தவம் புரிந்த மகாலட்சுமி நாமகிரி தாயார் என்ற நாமம் கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

கோவிலின் எதிரே கிழக்கு நோக்கி ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் நரசிம்மரை வணங்கிய வண்ணம் நிற்கின்றார்.

1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். அழகிய சிற்ப வேலைபாடுகள் கொண்டது. இதை அதியேந்திர விஷ்ணு கிரஹம் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

திருக்கோவிலின் அதிசயம்

மூலவர் நரசிம்மரை சுற்றி சிவனும், பிரம்மரும் கோபத்தை தனிக்க வணங்கிய வாரு உள்ளனர். சூரிய சந்திரர்கள் கவரி வீசுகின்றனர்.

இரண்யனை வதைத்த இரத்த கரை இன்றளவும் நரசிம்மரின் நகங்களில் உள்ளது அதிசயமான விடயம் ஆகும்.

மேலும் மற்ற இடங்களில் மகாலட்சுமி நரசிம்மரின் மடியில் அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு நரசிம்மரின் மார்பில் அமர்ந்திருப்பது சிறப்பாகும்.

நரசிம்ம ஜெயந்தி விழா

இத்திருக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா மிகவும் விசேடமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு நாளை மே 6-ஆம் தேதி புதன்கிழமை வளர்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது.

ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தில்

“ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்”

என நரசிம்மரின் புகழை பாடுகிறார். இந்த ஸ்தோதிரத்தை முழுமையாக பாராயணம் செய்தால் நாராயணன் நம் கையை தூக்கி விட்டு இந்த வாழ்வு கடலில் இருந்து காப்பார் என்பது உண்மை.

அனைவரும் இன்றைய சூழலில் கோவிலுக்கு செல்ல இயலவில்லை என்றாலும் இருந்த இடத்தில் இருந்தே நரசிம்ம ஜெயந்தியில் விரதமிருந்து உலக நன்மைக்காக ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பிராத்திப்போம்.

Previous articleகுஷ்புவின் மகளா? கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் உள்ளது
Next articleகவுதம் காம்பீர்; டி20 போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரிப்பது தவறான முடிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here