அருள்தரும் நவராத்திரி இரண்டாம் நாள் (Navaratri day 2): திருமண தடைகளை நீக்கும் சதுராக்னி துர்கை. திருக்கழிப்பாலை தனி சன்னதி கொண்டு அருள்பாளிக்கும் சதுராக்னி துர்கையம்மன்.
Navaratri day 2
அம்பிகைக்கு உண்டான நாட்களில் நவராத்திரி நாளில் பல்வேறு ரூபங்களில் தரிசனம் செய்து வருகின்றோம். துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்கிற ரூபங்களில் அந்த பராசக்தியை வழிபட்டு வருகின்றோம்.
முதல் மூன்று நாட்களில் அம்பிகையை துர்காம்பிகையாக வழிபட்டு வருகின்றோம். அந்த பராசக்தி “சதுராக்னி துர்கை” என்கின்ற திருநாமத்தில் அம்பிகை அருள்புரியும் திருத்தலமே திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோவில் ஆகும்.
திருமண வரம் அருள்வாள் சதுராக்னி துர்கை
சதுராக்னி என்பது பெண்சக்தியால் தோற்றுவிக்கப்படும் அக்னியாகும். இந்த அக்னியானது அனைத்து சங்கடங்களையும் அழித்து அமைதியை ஏற்படுத்தும்.
நான்கு திருக்கரத்துடன் துர்கை அருள்பாளிக்கிறாள். பால்வண்ணநாதர் திருக்கோவிலில் வடக்குநோக்கி தனி சன்னதியில் அருளாட்சி புரிகிறாள்.
ஜாதகத்தில் பெண்களுக்கு நான்காம் இடமானது கற்பை நிர்ணயிக்கும் ஸ்தானமாகும். அந்த நான்காம் இடத்தில் தோஷம் இருக்கையில் இங்கு வந்து சதுராக்னி துர்கையினை வழிபட்டால் அந்த தோஷம் நீங்கி கற்புகரசியாக விளங்குவார்கள்.
மனைவிமார்கள் இந்த துர்கையை வழிபடுபவதால் கணவன்மார்கள் பிறர்மனை நாடாதவர்களாய் இருப்பார்கள்.
இங்கே தம்பதி சமேதராய் இரண்டு அதிகார நந்திகள் இருப்பது இந்த தலத்திற்கு தனி சிறப்பு வாய்ந்தது ஆகும்.
இந்த துர்கையை வழிபட்டால் கன்னி பெண்களுக்கு உடனடியாக சிறந்த மணமகன் கிடைக்கப் பெறுவான் என்பது கண்கூடான உண்மை.
கற்பு நெறி தவறாத ஆண்மகன்கள் கிடைக்க பெறுவார்கள். பெண்களும் கற்பு நெறி தவறாமல் விளங்குவார்கள் என்பது இத்தல துர்கைக்கு உள்ள சிறப்பாகும்.
வேறு எங்குமே இந்த திருநாமத்தில் துர்கையை காண இயலாத திருத்தலம் ஆகும். இந்த துர்கையை இராகு காலத்தில் தீபமேற்றி வழிபட சகல கிரக தோஷத்தை நீக்கி வளமான வாழ்வருள்வாள்.
அமைவிடம்: அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர். navaratri day 1