Home Latest News Tamil vasantha navaratri: இராமர் விரதமிருந்த வசந்த நவராத்ரி

vasantha navaratri: இராமர் விரதமிருந்த வசந்த நவராத்ரி

568
0
vasantha navaratri இராமர் விரதமிருந்த வசந்த நவராத்ரி

வசந்த நவராத்ரி என்றால் என்ன? மற்ற நவராத்ரிகளுக்கும் வசந்த நவராத்ரிக்கும் என்ன வேறுபாடு?

vasantha navaratri: இராமரின் வெற்றிக்கு வசந்த நவராத்ரி காரணமா? லலிதாம்பிகை தியான மந்திரம் மற்றும் மூல மந்திரம் என்ன? what is vasantha navaratri? why celebrate?

அகில உலகையும் ஆளுகின்ற அன்னை பராசக்திக்கு பல்வேறு விழாக்கள் எடுத்து கொண்டாடுகிறோம்.

உள்ளூர் கிராமங்களில் கூட கிராம தேவதைகளாக அம்பிகை அருளாட்சி புரிந்து வருகிறாள்.

அனைத்து நாட்களுமே அன்னைக்கு திருநாளாயினும். சில நாட்கள் மிக முக்கியமான கருதப்படுகிறது

இந்த வசந்த காலத்தில் அன்னைக்கு கொண்டாடப்படும் திருநாளே வசந்த நவராத்ரி ஆகும்.

நான்கு வகையான நவராத்ரிகள்

ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்ரிகள் உண்டு.

  • ஆஷாட மாதத்தில் (ஆடி) வாராகி தேவிக்கு ஆஷாட நவராத்ரி.
  • சரத் ருதுவில் ( புரட்டாசி-ஐப்பசி) துர்கா லட்சுமி சரஸ்வதிக்கான சாரதா நவராத்ரி.
  • மகர மாதத்தில் (தை) வருவது மாதங்கிக்கு உரிய சியாமளா நவராத்ரி.
  • வசந்த ருதுவில் ( பங்குனி -சித்திரை) வருவது வசந்த நவராத்ரி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரிக்கு உரிய நவராத்ரி ஆகும்.

வசந்த நவராத்ரியின் சிறப்பு

வசந்த காலத்தில் அம்பிகைக்கு கொண்டாடப்படும் நவராத்ரி வசந்த நவராத்திரி ஆகும். பங்குனி முதல் சித்திரை வரை வசந்த ருது எனப்படுகிறது.

இதில் மஹா ஷோடசி எனப்படுகின்ற மஹா பட்டாரிகா ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரிக்கு ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பங்குனி அமாவாசை முடிந்து வரும் பிரதமையில் இருந்து நவமி வரை ஒன்பது நாட்கள் அம்பிகையை விரதமிருந்து பூஜிக்க வேண்டும்.

லலிதா திரிபுரசுந்தரி மற்றும் 64 யோகினிகள்

அன்னை லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர மஹா மேரு பீடத்தின் மத்தியில் அமர்ந்து ஆட்சி புரிகிறாள்.

அன்னையின் சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் இருபுறமும் இருக்கின்றனர். பைரவரும், காளியும் காவல் புரிகின்றனர் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சதாசிவன் அவளின் சிம்மாசனத்தை தாங்கி நிற்கின்றனர்.

வாராகி படைத்தலைவியாகவும் மற்றும் மாதங்கி அமைச்சராக இருக்க அம்பிகையில் இருந்து வெளிவந்த சக்திகளான அறுபத்தி நான்கு யோகினிகளை கொண்டு ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆட்சி புரிகிறாள்.

இவளின் தோற்றத்தை லலிதா சகஸ்ரநாம தியானத்தில் கூறப்பட்டுள்ளது.

தியானம்

“அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம் l
அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை-
ரஹமித்யேவ விபாவயே பவானீம் || 2 ||
த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித
வதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம், ஹேமாபாம் பீதவஸ்த்ராம்
கரகலித-லஸத்ஹேம-பத்மாம் வராங்கீம் |

ஸர்வாலங்கார-யுக்தாம் ஸதத-மபயதாம் –
பக்த-நம்ராம் பவானீம், ஸ்ரீவித்யாம் சாந்த-மூர்த்திம்
ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம் || 3||

ஸகுங்கும-விலேபனா-மளிகசும்பி – கஸ்தூரிகாம்
ஸமந்த-ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம் |
அசேஷஜனமோஹிநீ–மருண-மால்ய-பூஷாம்பராம்
ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே-தம்பிகாம் ll

என்று அம்பிகையை தியானிக்கும் ஸ்லோகம் அமைந்துள்ளது.

மேரு சாம்ராஜ்யத்தில் அனைத்து தேவர்களுக்கும் இடம் உண்டு. எனவே ஸ்ரீ சக்ர மஹா மேருவை பூஜித்தால் அனைத்து தேவர்களையும் பூஜித்த பலன் கிடைக்கும்.

இந்த vasantha navaratri விழாவில் அம்பிக்கைக்கும் 64 யோகினிகளுக்கும் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுகின்றது.

இராமாயணத்தில் வசந்த நவராத்ரி

இராமாயண காலத்தில் ஸ்ரீ இராமர் இராவணனை வதம் செய்வதற்கு வேண்டி அன்னைக்கு ஒன்பது நாட்கள் vasantha navarathiri விரதமிருந்தார்.

விரத முடிவில் அன்னை தோன்றி இராவணனை வதம் செய்ய வரம் அளித்தால் என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்தே வசந்த நவராத்ரியின் தொன்மையை அறிய முடியும்.

மேலும் vasantha navaratri முடிவில் நவமியன்று இராமர் பிறந்த தின விழாவும் (இராம நவமி) கொண்டாடப்படுகிறது.

2020 வசந்த நவராத்ரி விழா

இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி துவங்கும் vasantha navarathri ஏப்ரல் 2 இல் முடிவடைகிறது.

இந்த நாட்களில் ஸ்ரீ சக்ர மஹா மேரு நவாவரண பூஜை, அறுபத்தி நான்கு யோகினிகள் பூஜை, சண்டி ஹோமம் போன்றவைகள் கோயில்களில் நடத்தப்படுகிறது.

வீட்டில் இருந்தவாரே தினமும் லலிதா சகஸ்ரநாமம், லலிதா நவரத்தின மாலை பாராயணம் செய்யலாம்.

லலிதாம்பிகை மூல மந்திரம்

“க ஏ ஈ ல ஹ்ரீம்
ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஸ க ல ஹ்ரீம்”

என்ற மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம்.

அனைவரும் தவறாமல் vasanth navarathri விழாவில் அம்பிகையை வழிபட்டு இந்த பிரச்சனைகள் நிறைந்த காலகட்டத்தில் உலக நன்மையும், உடல் நலனையும் வேண்டி அம்பிகையை பூஜிப்போம்.

Previous articleகாஜல் அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்: விஜய்யுடன் 4ஆவது படமா?
Next articleஅய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சரத்குமார் – சசிகுமார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here