Home ஆன்மிகம் சைவ முதலை பபியா இறைவனின் திருவடி சேர்ந்தது!

சைவ முதலை பபியா இறைவனின் திருவடி சேர்ந்தது!

201
0
சைவ முதலை

சைவ முதலை: கேரள மாநிலம் அனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் சைவ முதலை பபியா இறைவனடி சேர்ந்தது.

முதலைகள் என்றாலே மிகவும் கொடிய உயிரினம் ஆகும். பிற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் என்பதை நாம் அறிவோம்.

ஆனால், அனைவரும் வியக்கத்தக்க வகையில் சைவ உணவை மட்டுமே அதுவும் கோவில் பிரசாதம் மட்டுமே உண்ணும் ஒரு முதலை நமது நாட்டிலே உள்ளது என்பதை அறிவீர்களா?

ஆம், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பல ஆண்டுகளாக கோவிலின் குலத்தில் சைவ முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. பபியா என்று பெயர் கொண்ட முதலை கோவிலின் குலத்தில் இருந்தது யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காமல் வாழ்ந்தது.

இந்த குலத்தில் பல முதலைகள் முன்பு வாழ்ந்துள்ளது. ஆனால் பபியா மட்டுமே தனித்துவமான முதலையாகும். வாழ்நாள் முழுவதும் சைவ உணவு மட்டுமே உண்டு வந்தது.

தினந்தோறும் மதியம் கோவிலின் பிரசாதத்தை மட்டுமே சாப்பிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது கோவிலின் பிரகாரத்தில் வலம் வரும். ஆனால், யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படுத்தாது. இதுவே கோவிலை பாதுகாத்தும் வந்துள்ளது.

இப்படிப்பட்ட அற்புதமான நற்குணங்கள் கொண்ட முதலை நேற்று இரவு பௌர்ணமி நாளில் (9/10/2022) அன்று ஸ்ரீ பத்மநாபனின் திருவடியை அடைந்துள்ளது.

இந்த குலத்தில் இதுவரை பல முதலைகள் வாழ்ந்திருந்தாலும் முதலையின் உடல் கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.

தற்பொழுது கோவிலில் பக்தர்கள் தரிசனதிற்காக முதலையின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரின் அன்பிற்கு உரிய முதலை இறைவனடி சேர்ந்தது பக்தர்களின் மனதிற்கு வருத்தத்தை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here