Home நிகழ்வுகள் இந்தியா கேரளாவில் ‘கொரோனா தேவி’ ஆலயம்

கேரளாவில் ‘கொரோனா தேவி’ ஆலயம்

259
0
கேரளாவில் 'கொரோனா தேவி' ஆலயம்

கேரளாவில் ‘கொரோனா தேவி’ ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேலாவில் கொரோனாவிற்கு ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

கேரளா: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிற்கு பக்தர் ஒருவர் கோவில் கட்டி வழிபட்டு வரும் சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை எழில்கொஞ்சும் கேரளா மாநிலத்தில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகைக் காண கோடி கண்கள் வேண்டும். ‘கொரோனா’ இந்த பெயரைக் கேட்டால் உலகமே நடுங்குகிறது.

ஆனால் இந்த கொரோனா வைரசுக்கு கோவில் கட்டி கொரோனாவின் உருவத்தை சிலையாக வடித்து பக்தர் ஒருவர் வழிபாட்டு வருகிறார். இங்கு நாள்தோறும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

கேரளாவின் கொல்லம் பகுதியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடக்கல் என்ற கிராமத்தில் தான் இந்த ’கொரோனா தேவி’ ஆலயம் அமைந்துள்ளது.

இதனை அணிலன் என்பவர் கட்டியுள்ளார். கோவில்கள் மூடப்பட்டுள்ள இந்த ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே தங்கள் வேண்டுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோவில் குறித்து அனிலன் கூறுகையில் ௩௩ கோடி ஹிந்து கடவுள்களுடன் தற்போது இந்த கடவுளும் இணைந்துள்ளார். கேரளாவில் பெரியம்மைக்கு என ஏற்கனவே கோவில் ஒன்று உள்ளது.

தொற்றுநோய்க்கு எதிராக போராடிவரும் அனைவரின் நலவாழ்வு மற்றும் நலனுக்காக இந்த தெய்வத்திற்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. எங்கள் கோவிலில் தரிசனம் இல்லை.

எனினும் கொரோனா தேவியின் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு புதிய வழக்கம் கிடையாது.

சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா எதிர்ப்பு வீரர்களுக்காக இந்த கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பிறருக்கு உதவி செய்பவர்களின் பெயர்களில் பூஜைகள் நடத்தப்படும். பிரசாதம் வேண்டுமெனில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். பூஜைகள் மற்றும் பிரசாதங்களுக்கு நான் பணம் வசூலிக்க மாட்டேன்.

இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல. அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleநாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா, 1989 புதிய கொரோனா தொற்றுகள்
Next articleதல- தளபதிக்கு 50 கோடிக்கு மேல் வசூல் தந்த படங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here