Home விளையாட்டு தயவு செய்து ஓய்வு பெறுங்கள் முன்னாள் பாகிஸ்தான் வீரர்

தயவு செய்து ஓய்வு பெறுங்கள் முன்னாள் பாகிஸ்தான் வீரர்

281
0

தயவுசெய்து நீங்களாக ஓய்வு அறிவித்து விடுங்கள் என்று கழுத்தை பிடித்து தள்ளும் விதமாக ஹபீஸ் மற்றும் மாலிக் இருவரையும் பற்றி அந்த அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருபவர்கள்தான் சோயப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ்.

இருவருமே ஆல்-ரவுண்டராக பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி அணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். இருவருக்குமே சராசரி 40 வயதை எட்ட உள்ளது.

சோயப் மாலிக் 1999 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிக்கு அறிமுகமாகி இன்றுவரை 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் 432 சர்வதேச போட்டிகளில் விளையாடி 11753 ரன்கள் குவித்துள்ளார்.

பந்துவீச்சு 218 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் ரியாத் எதிரான பல ஆட்டங்களில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் வெற்றி பெற வைத்துள்ளார்

இதேபோல்தான் முகமது ஹபீஸ் 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகி 17 வருடங்களாக பாகிஸ்தானில் விளையாடி வருகிறார்.

இதுவரை 364 சர்வதேச போட்டிகளில் விளையாடி 12258 ரன்கள் குவித்துள்ளார் பந்துவீச்சு 246 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆல்-ரவுண்டராக பாகிஸ்தானிற்கு சிறந்து விளங்கினார். ஆல்ரவுண்டர் ரேங்கிங்கில் முதல் 10 இடங்களுக்குள் பல காலங்களாக இருந்து வருகிறார்.

சில மாதங்களாகவே இருவரின் ஆட்டத்திலும் சோர்வுகள் அதிகம் தென்படுகிறது. பாகிஸ்தான் இளம் வீரர்கள் அதிகம் இருந்து வருகிறார்கள்.

இளம் வீரர்களுக்கு ஆதரவாக பேசுவதுபோல் இவர்கள் இருவரையும் ஓய்வு பெறும்படி அறிவுறுத்தி உள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா. அவர் கூறியதாவது :

“முழுமனதாக இருவரும் சர்வதேச போட்டிகளிலிருந்து மரியாதையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் வெளியேறவேண்டும்.

பல ஆண்டுகளாக இருவருமே பாகிஸ்தான் அணிக்காக ஆடி விட்டனர். அந்த அணிக்கு பல வெற்றிகளை குவித்துள்ளனர். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஆனால் தற்போது ஒருமனதாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இருவரும் ஓய்வு பெறவேண்டும்.

இவர்கள் ஓய்வு பெறும் பட்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அது மிகவும் உதவும். அடுத்து வரும் இளம் வீரர்களை தயார் செய்யலாம்’ என்று கூறியுள்ளார்.

இதில் முகமது ஹபீஸ் வருகிற அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பையுடன் ஓய்வு பெற போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

Previous article9/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleThis Day in History April 09; வரலாற்றில் இன்று ஏப்ரல் 09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here