இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்படி 3 ஒருநாள் போட்டி தொடரில் மூன்று போட்டிகளில் தோற்று வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.
இரண்டு போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் முதல் போட்டி இன்று பல்லிக்கல்லே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.
சிம்மன்ஸ் 67 ரன்கள், பிராண்டன் கிங் 33 ரன்கள், பூரான் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ரசல், பொல்லார்டு அதிரடி
அடுத்ததாக களமிறங்கிய ரசல் மற்றும் கிரன் பொல்லார்டு, இலங்கை அணியின் பந்துவீச்சை சிக்ஸர்கள் ஆக பறக்கவிட்டனர்.
ரசல் 14 பந்துகளில் 35 ரன்களும் பொல்லார்டு 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து 6 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார்.
இலங்கை தரப்பில் சண்டகன், மலிங்கா, ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இலங்கை தோல்வி
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
25 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
ஓசன்னா தாமஸ் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இலங்கை அணி தரப்பில் குசல் பெரேரா 66 ஹசரங்கா 44, மேத்யூஸ் 10, திசாரா பெரேரா 11 ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மேற்கிந்திய தீவு ஒக்ஷ தரப்பில் ஓசேனா தாமஸ் ஐந்து விக்கெட்டுகளும், பவல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஓசனை தாமஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது.
அடுத்த போட்டி
இரண்டாவது t20 போட்டி வருகிற மார்ச் 6 ஆம் தேதி, இதே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.