கொரோனா வைரஸால் மக்கள் படும் அவதியை கண்டு மனம் உடைந்து போகிறோம் என விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலகத்தையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. பல லட்சம் மக்களை பாதிப்படையச் செய்கிறது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஸ்தம்பித்துள்ளது. பெரிய இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்பால் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டு இளவரசி (86 வயது) கொரோனா தொற்றால் காலமானார்.
பிரதமர் பிரிட்டன், பிரிட்டன் இளவரசர் போன்றவர்களின் இந்த கொரோனா விட்டுவைக்கவில்லை.
மோடி நேற்று தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் உங்களால் முடிந்த நிதியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டு இருந்தார்.
அதற்கு டாடா குழுமம் 1500 கோடி ,நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி, சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், பிசிசிஐ 51 லட்சம், ரகானே 10 லட்சம், ரெய்னா 52 லட்சம்
என பலரும் தங்களது நிதியை நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவின் விளையாட்டு வீரர்களில் வருடத்திற்கு அதிகம் சம்பாதிக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி தங்களது ட்விட்டர் பக்கத்தில்
“நானும் அனுஷ்காவும் பிரதமர் மற்றும் மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்கிறோம். கொரோனா வைரஸால் மக்கள் படும் அவதிகளை காணும்போது எங்கள் இதயம் உடைந்து போகிறது.
அவர்களுக்கு எங்களால் முயன்ற உதவிகளை செய்கிறோம். இந்த உதவி ஏதேனும் ஒரு வகையில் மக்களின் துயரத்தைத் தீர்க்க பயன்படும் என நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்
விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் 3 கோடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் விராத் கோலி இதை எதிலும் குறிப்பிடவில்லை.