மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றது.
இதில் வியாழக்கிழமை நடந்தேறிய பெண்களுக்கான 68 கிலோ பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன், ஜப்பானை சேர்ந்த வீராங்கனை நருஹா மட்சுயூகியை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதனால் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் .
கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் திவ்யா வெண்கலம் வென்றிருந்தார்.
தங்க பதக்கத்தை வெல்லமுடியாமல் போனதை எண்ணி வருத்தமும் அடைந்தார். எனினும் விட முயற்சியால் இந்தாண்டு சிங்கபெண்னென வெற்றிகண்டார்.
65 கிலோ பிரிவில் 2018 ஆம் ஆண்டில் சாதனை படைத்த முதல் இந்திய பெண்மணி நவ்ஜோத் கவுர் என்பது குறிப்பிடத்தக்கது.