Home Latest News Tamil முதல் ஐ‌பி‌எல் போட்டியில் சி‌எஸ்‌கே அபார வெற்றி

முதல் ஐ‌பி‌எல் போட்டியில் சி‌எஸ்‌கே அபார வெற்றி

1328
0

முதல் ஐ‌பி‌எல் போட்டியில் சி‌எஸ்‌கே அபார வெற்றி

ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

கேப்டன் விராட் கோலி 6 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும், அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் இருவரும் ஹர்பஜன் பந்துவீச்சில் சிக்கினார்கள்.

பார்திவ் படேல் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டத்தை இழந்தனர். அதிகபட்சமாக பட்டேல் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்களையும், பிரவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 71 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

வெற்றியை மட்டுமே மனதில் கொண்டு களம் இறங்கிய சென்னை அணி மெதுவாக ஆட்டத்தை ஆரம்பித்தது. ரன் எடுக்காமல் வாட்சன் ஆட்டம் இழக்க மறுமுனையில் ராயுடு, ரெய்னா பொறுமையாக ஆடி வந்தனர்.

சின்ன தல ரெய்னா 5000 ரன்களை கடந்த முதல் ஐ‌பி‌எல் வீரரானார். சி‌எஸ்‌கே அணியின் முதுகெலும்பாக அனைத்து சீஷனிலும்  சிறப்பாக செயல்பட்ட ஒரே வீரர் இவர்தான்.

இறுதியில் சென்னை அணி 17.4  ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதனையடுத்து ஐபிஎல் புள்ளி பட்டியிலில் ஒரு வெற்றியுடன் சென்னை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

முக்கியமான மூன்று விக்கெடை எடுத்த ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் படத்தை தட்டி சென்றது மட்டும் இல்லாமல் தன்னுடைய புலவர் பாணியில் ஆர்‌சி‌பியை டிவிட்டரில் கலாய்த்த ஹர்பஜன்.

Previous articleஐபிஎல் போட்டி ஆரம்பமே அசத்தல்: கிளிக் செய்து நேரலையில் காணவும்
Next articleஉலகக் காச நோய் தினம் மார்ச் 24: உலக சுகாதார அமைப்பு
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here