#CSKvsRR எமனே எதிரில் வந்தும் தோனியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் வாட்ஸ்சன்-ராயுடு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
5 ஓவருக்கு 27 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டு இருந்தது. பின்னர் தோனியும் ரெய்னாவும் ஜோடி சேர்ந்து சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
தோனி முதல் பந்திலேயே பந்து பேட்டில் பட்டு உருண்டு சென்று போல்டில் பட்டது. ஆனால் பைல்ஸ் கீழே விழவில்லை.
எமனே முதல் பாலில் எதிரில் வந்தும் இறுதி வரை தோனியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 75 ரன்கள் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்தது. ரெய்னா 36 ரன்னும் பிராவோ 27 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களே எடுத்தது. பென்ஸ்டோக்ஸ் அதிக பட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து முதல் மூன்று போட்டிகளை வென்று தோல்வியே பெறாத ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர் அணிகள் மூன்றும் போட்டியிலும் தோல்வி கண்டு கடைசி இடத்தைப் பிடிப்பது யார் என போட்டி போட்டு கொண்டு உள்ளது