SRHvsRCB: ஹிமாலயா ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ்: மறுபடியும் கோலிக்கு ஆப்பு
16.1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 185 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. டேவிட் வார்னர் 70, ஜானி பைர்ஸ்டோவ் 114 ரன்களுடன் முரட்டுத் தனமாக அடித்தனர்.
இதன் பிறகே முதல் விக்கெட் ஜானியை அவுட் செய்தனர். அதன் பிறகு களம் இறங்கிய விஜய் சங்கர் வந்த வேகத்திலேயே 9 ரன்னுடன் ரன் அவுட்டாகி வெளியே சென்றார்.
20 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழந்து சன்ரைசர்ஸ் அணி 231 ரன்கள் குவித்தது. வார்னர் சரியாக கடைசி ஓவரில் 100 ரன்கள் அடித்தார்.
ஒரு வருடமாக கிரிக்கெட் போட்டியில் பங்கு கொள்ளாமல் இருந்த வார்னர் இன்றைய போட்டியில் சதம் அடித்த மகிழ்ச்சியில் மைதானத்தில் கர்ஜனை செய்தார்.
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ராயல் சேலஞ்சர் அணி தாக்குப்பிடிக்குமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
பின்னர் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே படுதோல்வி அடைந்தது.