Home விளையாட்டு  ஷார்ஜாவில்  சச்சின் என்னும் புயல் ! ஏப்ரல் 22 , 1998  ஷார்ஜா மணல்...

 ஷார்ஜாவில்  சச்சின் என்னும் புயல் ! ஏப்ரல் 22 , 1998  ஷார்ஜா மணல் புயல் என்று வர்ணிக்கப் படும் ( Desert Strom ) மேட்ச் !

சச்சின் தனது உச்சக்கட்ட அதிரடியை அன்று காமித்தார் !  ஆம் பிளெமிங் , காஸ்ப்ரோவிஸ் , மூடி , வார்னே என அனைவரின் பந்து வீச்சையும் ஒரு கைப்பார்த்து விட்டார். ஒருபுறம் கங்குலி , மோங்கியா , அசார் , ஜடேஜா என விக்கெட்கள் சரிய சச்சினோ தனி ஆளாக அடித்து நொறுக்கினார். 

333
0

                        ஷார்ஜாவில்  சச்சின் என்னும் புயல் !

 

சச்சின் டெண்டுல்காரின் வியக்கத் தக்க ஆட்டங்களில் ஷார்ஜா மணல் புயல் என்று வர்ணிக்கப் படும் ( Desert Strom ) ஏப்ரல் 22 , 1998  மேட்ச் மிக மிக பிரசித்தம் !

 

இந்தியா , நியூஸிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபெற்ற கோகோ-கோலா கோப்பை துபாய் ஷார்ஜாவில் நடைப்பெற்றது 1998 ஆம் ஆண்டு .

 

அந்த தொடர் முழுவதிலும் சச்சின் மிக அருமையாகவே விளையாடி வந்தார் .

இந்திய அணி இறுதிப் போட்டியில் பங்குபெற ரன் ரேட் பெரிய தடையாக இருந்தது .

 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 284 ரன்கள் குவித்தது…

 

அந்த தொடரின் இறுதி லீக் போட்டியில் இந்திய அணி 46 ஓவர்களில்  237 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம்.

 

அநேகரும் நியூஸிலாந்து அணி தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் என்று எண்ணினர் , ஆனால்  நடந்ததோ வேறு ! 

 

சச்சின் தனது உச்சக்கட்ட அதிரடியை அன்று காமித்தார் ! 

ஆம் பிளெமிங் , காஸ்ப்ரோவிஸ் , மூடி , வார்னே என அனைவரின் பந்து வீச்சையும் ஒரு கைப்பார்த்து விட்டார்.

ஒருபுறம் கங்குலி , மோங்கியா , அசார் , ஜடேஜா என விக்கெட்கள் சரிய சச்சினோ தனி ஆளாக அடித்து நொறுக்கினார். 

 

அனைவரும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுமா என்று நினைத்த நேரத்தில் போட்டியையே  வெல்ல வாய்ப்பு அமையும் வரை அடித்து நொறுக்கினார்.

 

குறிப்பாக 5 சிக்சார்கள்  9 போர்கள் குவித்து 143 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

 

“ இந்தியா போட்டியில் தோற்றது , சச்சின் பல உள்ளங்களை கவர்ந்தார் “ ! இந்த அருமையான சச்சினின் அதிரடி அரங்கேறியது இதே ஏப்ரல் 22 , 1998.

 

அந்த தொடரின் இறுதிப் போட்டியிலும் 132 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல  பெரிதும் முனைந்தார் சச்சின்.

 

சச்சின்  என்னும் புயல் ஷார்ஜாவை கலக்கி இன்றளவும் பல உள்ளங்களில் மையம் கொண்டுள்ளது.

 

சா.ரா

 

Previous articleவிஜய்யின் மாஸ்டர் பிளான்: 31 நாட்களுக்குப் பிறகு ரூ.1.30 கோடி நிதியுதவி!
Next articleThala Ajith: நிதியுதவி செய்வதிலேயும் அஜித்தை பின் தொடரும் விஜய்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here