Home நிகழ்வுகள் காம்பீர், சேவாக், சச்சின்: மூவரையும் ஓரம் கட்டியவர் தோனி!

காம்பீர், சேவாக், சச்சின்: மூவரையும் ஓரம் கட்டியவர் தோனி!

1306
0
காம்பீர்

காம்பீர், சேவாக், சச்சின்: மூவரையும் ஓரம் கட்டியவர் தோனி!

இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் என்றால் அது கவுதம்காம்பீர், சேவாக் கூட்டணியே. அதிரடிக்குப் பஞ்சம் இருக்காது.

சேவாக்-காம்பீர் கூட்டணி 10 ஓவர்கள் ஒன்றாக நின்று விட்டால், எதிரணி பவுலர்கள் கதிகலங்கிவிடுவர். அதன் பிறகு அவர்களின் அடி ஒவ்வொன்றும் இடி போன்று இருக்கும்.

சேவாக், காம்பீர் மற்றும் சச்சின் மூவரும் அவுட் ஆகிவிட்டால் ரசிகர்கள் டிவியை ஆப் பண்ணும் அளவிற்கு நம்பிக்கை வீரர்களாக விளங்கினர்.

காம்பீர்-சேவாக், இருவரதும் இறுதி நாட்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக கவுதம்காம்பீர் முற்றிலும் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

இதற்கு காரணம் தோனியே என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் காம்பீர்.

கவுதம்காம்பீர் கூறியதாவது, 2012-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி தொடரின்போது சச்சின், சேவாக் மற்றும் என்னை அணியில் ஆடவைக்க முடியாது என தோனி முடிவு செய்தார்.

ஒரே நேரத்தில் மூவரையும் அணியில் சேர்க்க முடியாது எனத் தெரிவித்தார். தொடக்க வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதனால் தோல்வியைத் தழுவுகின்றோம்.

உங்கள் மூவரால் இளம் வீரர்களை அணியில் சேர்க்க முடிவதில்லை. 2015 உலக கோப்பை போட்டிக்கு அணியைத் தயார் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறி மூவரையும் ஓரம் கட்டினார். இது எனக்கு அதிர்ச்சியளித்தது. 2015-ல் நடக்கும் உலகக் கோப்பைக்கு 2012-ல் முடிவு செய்வது எப்படி எனக் கேட்டேன்?

ஆனால், அவர் எடுத்த முடிவு தவறானது. நாங்கள் இல்லாத அணி தொடர் தோல்விகளைத் தழுவிவந்தது.

எங்கள் மூவரையும் ஒன்றாக களமிறக்கினார். சச்சினும் சேவாக்கும் துவக்க ஆட்டக்காரர்களாகவும், நான் மூன்றாவதாகவும் களமிறங்கினேன்.

இலங்கைக்கு எதிரான அப்போட்டியில் அபார வெற்றி பெற்றோம். இதனால் தோனி,  அவருடைய முடிவை மாற்றிக்கொண்டார்.

மூவரும் ஒன்றாக ஆடக்கூடாது என்ற முடிவு தவறா? இல்லை, மூவரையும் ஒன்றாக களமிறக்கியது தவறா? எனக் கோபமாக பதிலளித்திருந்தார்.

அதேவேளை, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒரே அறையில் ஓய்வு எடுத்துள்ளோம். இருவருக்கும் இடையே நல்ல உறவு நீடித்தது.

இருவருக்கும் இடையே பகை உள்ளது என வெளியான செய்திகள் எல்லாம் வெறும் வதந்தியே எனவும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here