Home Latest News Tamil உலகக்கோப்பையில் தோனியின் பங்களிப்பு முக்கியம் – யுவ்ராஜ்

உலகக்கோப்பையில் தோனியின் பங்களிப்பு முக்கியம் – யுவ்ராஜ்

434
0
உலகக்கோப்பையில்

உலகக்கோப்பையில் தோனியின் பங்களிப்பு முக்கியம் – யுவ்ராஜ்

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ்சிங் www.livepools.com இணையத்தின் திறப்பின்போது அளித்த பேட்டியில் முன்னாள் கேப்டன் தோனியைப் பற்றி ஒருசில வார்த்தைகள் கூறினார்.

தோனி ஆட்டத்தை கணிப்பதில் மிகவும் சிறந்தவர். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் முடிவு எடுக்கும் பொழுதும், டி‌ஆர்‌எஸ் கேட்கும் பொழுதும் தோனியின் பங்களிப்பு அவசியம்.

விக்கெட் கீப்பிங்க் மற்றும் சேசிங்கில் தோனி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2019-ஆம் ஆண்டு தோனிக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

யுவ்ராஜ் மற்றும் தோனி இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஒன்றாக நிலைத்து நின்று ஆடி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.

தோனி கேப்டன் ஷிப்பில் யுவ்ராஜ் 175 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்தியா வென்றுள்ள 2007 டி20 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் முக்கிய பங்காற்றியவர் யுவ்ராஜ் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்பொழுது போதிய வாய்ப்பு கிடைக்காததால் இந்திய அணிக்கு விளையாட முடியாமல் தவிக்கிறார். ஐ‌பி‌எல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் யுவ்ராஜ் திணறி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here