Home விளையாட்டு விராட் கோலி-யின் “ஈ சாலா கப் நமதே” நிஜமாகுமா?

விராட் கோலி-யின் “ஈ சாலா கப் நமதே” நிஜமாகுமா?

327
0
ஈ சாலா கப் நமதே ராயல் சேலஞ்சர்ஸ் விராட் கோலி கஜினி முகமது

விராட் கோலி-யின் “ஈ சாலா கப் நமதே”, ஒவ்வொரு ஆண்டும் இந்த மந்திரம் பலிப்பதில்லை. இருப்பினும் கஜினி முகமது போன்று விடாமல் படையெடுக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல்லில் 12 வருடமாக ஒரே அணியில் விளையாடும் ஒரு சில வீரர்களில் விராட் கோலியும் ஒருவர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐந்து தடவை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதில் மூன்று முறை இறுதி ஆட்டத்திற்கு சென்றது.

ஆனால், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஐபிஎல்லில் உள்ள 8 அணிகளின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அதிகப்படியான உணர்வுபூர்வமான ரசிகர்கள் உள்ளனர்.

விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ், யுவராஜ் சிங், டேல் ஸ்டெயின் போன்ற வீரர்கள் இந்த அணிக்கு சீசன் சீசனாக மாறி வருகிறார்கள்.

அணியில் விளையாடும் போது நன்றாக விளையாடும் இந்த வீரர்கள் ராயல் சேலஞ்சர் வந்தவுடன் சொதப்பி விடுவார்கள்.

இதில், விராத் கோலியை தவிர மற்ற அனைத்து வீரர்களும் வெவ்வேறு அணிகளில் விளையாடியவர்கள்.

ஈ சாலா கப் நமதே

இந்த அணியின் ரசிகர்கள் கடந்த காலமாகவே ஐபிஎல் கோப்பையை வெல்ல ஒரு மந்திரச் சொல்லை பயன்படுத்தி வருகிறார்கள் அது “EE Sala Cup Namde”.

பெங்களூரு அணி விளையாடும் போது இந்த மந்திரக் கோஷத்தை ரசிகர்கள் கரகோஷம் செய்வார்கள்.

இந்திய அணியின் விராட் கோலி விளையாடும் போதும் மைதானத்தில் ரசிகர்கள் “ஈ சாலா கப் நமதே” என்று போஸ்டர் எழுதி வைத்திருப்பார்கள்.

இந்திய அணியை விராட் கோலி வழி நடத்தும்போது ஆக்ரோஷத்துடன் கேப்டன்ஷிப் செய்து வெற்றியாய் குவிப்பார்.

ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று வந்தவுடன் மற்ற நாட்டு வீரர்களை கையாள்வதில் வீராட் கோலி சிரமப்படுகிறார். ஆனால் தான் ரன் சேர்ப்பதில் என்றும் கில்லாடியாக திகழ்கிறார்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஐந்து தடவை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அதில் இரு தடவை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நியூசிலாந்து அணிக்கு எப்படி உலக கோப்பை கனவாகவே உள்ளதோ அது போல ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்கு கோப்பை கனவாகவே உள்ளது.

பெங்களூரு அணி எப்போதுமே முதல் 7 ஆட்டங்களில் அதிக தோல்விகள் பெற்றுவிடும் கடைசி 7 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று மற்ற அணி போட்டிகளின் வெற்றி/தோல்வி அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்த அணியின் நிர்வாகம் வெளிநாட்டு அதிரடி வீரர்களை அதிக பணத்திற்கு வாங்கி குவிக்கும். ஆனால் என்னவோ இந்த அணிக்கு வந்தவுடன் அந்த வீரர்கள் ஃபார்ம் அவுட் ஆகி விடுவார்கள்.

இந்திய அணியில் காட்டும் ஆக்ரோஷத்தை விராட் கோலி பெங்களூரு அணியிடம் காட்டி இருந்தால் ஒருவேளை கோப்பையை வென்றிருக்கலாம். ஆனால் விராட் கோலி தன்னுடைய ஃபார்ம் முக்கியம் என்று விளையாடுவார்.

கஜினி முகமது

எத்தனை முறை தோற்றாலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தன்னுடைய வாசகத்தை மாற்றாமல் கஜினி முகமது போன்று விடாமல் முயற்சித்து வருகிறது.

ஐபிஎல் 2020: இந்த தடவையாவது தன் அணியை ஆக்ரோஷத்துடன் செயல்பட்டால் ரசிகர்கள் எழுப்பும் “ஈ சாலா கப் நமதே” என்ற மந்திரம் நிஜமாகும்.

Previous articleBiskoth First Look: பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Next articleValimai: வைரலாகும் வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here