Home விளையாட்டு Happy Birthday Sachin; சச்சினின் சில சுவாரசியமான தகவல்கள்

Happy Birthday Sachin; சச்சினின் சில சுவாரசியமான தகவல்கள்

334
0

Happy Birthday Sachin; சச்சினின் சில சுவாரசியமான தகவல்கள், Interesting Facts of Sachin Tendulkar, Unknown Facts of Sachin Tendulkar. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

  • 1987ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் எடுத்து நடத்திய உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் தன்னார்வமாக எல்லையில் பந்து சேகரிக்கும் பணியை செய்தார்.
  • சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர், பாடகர் சச்சின் தேவ் பர்மனின் மிகப்பெரிய ரசிகராக இருந்ததே லிட்டில் மாஸ்டர் சச்சினுக்கு பேர் வைக்க காரணமாக அமைந்தது.
  • 16 வயதில் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை ஆடிய சச்சின் டெண்டுல்கர் முதல் இரண்டு போட்டிகளிலும் ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாம் பந்திலேயே அவுட் ஆகியுள்ளார்.

sachin unknown facts

  • 1988ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் சச்சின் பாகிஸ்தானுக்காக சப்ஸ்டிட்யூட் வீரராக ஃபீல்டிங் செய்தார்.
  • 1988ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி இருவரும் ஜோடி சேர்ந்து 664 ரன்கள் அடித்தனர். இதில் சச்சின் மட்டும் 324 ரன்கள் அடித்திருந்தார்.

sachin kambli

  • இங்கிலாந்தில் நடக்கும் யோர்க்ஸய்ர் கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்ட இளம் இந்தியா வீரரும் முதல் ஓவர்சீஸ் வீரரும் ஆவார்.
  • எம்‌ஆர்‌எஃப் பந்து வீச்சு அகாடெமியில் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி சச்சின் டெண்டுல்கரை நிராகரித்தார். ஆனால் சச்சின் தனது கிரிக்கெட் கரியரில் 154 விக்கெட்  ஒருநாள் போட்டியிலும் 46 விக்கெட் டெஸ்ட் போட்டியிலும் எடுத்தார்.
  • 1997ஆம் ஆண்டின் விஸ்டம் கிரிக்கெட்டர் விருதை வென்றதுடன் 11 பேர் கொண்ட விஸ்டம் உலக அணியில் இடம்பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.
  • 2010ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் 200 அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

sachin first 200

  • ஆஸ்திரேலியாவின் ‘அன் ஆசீஸ் கோஸ் போல்லி’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.  அது பாக்ஸ் 8 சேனலில் ஒளிப்பெருக்கம் செய்யப்பட்டது.
  • சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை அதிக முறை எடுத்த வீரர் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஆவார்.

sachin bret lee

  • உலக கிரிக்கெட்டில் 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்.
  • சச்சின் டெண்டுல்கரின் ஜெர்ஸி எண் 10 அவர் விளையாடி 5 வருடங்களாக யாருக்கும் அளிக்கபடிவில்லை. தற்காலிகமாக அதை மற்றவர்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

sachin jersey no

Previous articleதேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), 71 துணை பேராசிரியர்களை பணியில் அமர்த்தியது
Next articleஇன்று சச்சின் பிறந்தநாள் ! ட்ரெண்டாகும்  #HapyBirthdaySachin !! 
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here