Home நிகழ்வுகள் இந்தியா தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), 71 துணை பேராசிரியர்களை பணியில் அமர்த்தியது

தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), 71 துணை பேராசிரியர்களை பணியில் அமர்த்தியது

221
0
தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), 71 துணை பேராசிரியர்களை பணியில்

திருச்சி: தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT)திருச்சி , 71 துணை பேராசிரியர்களை இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் பணியில் அமர்த்தியுள்ளது.

இதில் 5 பேர் பணியில் சேர்ந்து விட்டனர், மீதம் உள்ளவர்கள் ஊரடங்கு முடிந்தபின் பணியில் சேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான(EWS) இடங்களை சேர்த்த பின்பு காலி இடங்களின் எண்ணிக்கை 134இல் இருந்து 147ஆக உயர்ந்துள்ளது.

தேசிய தொழில்நுட்பக் கழகம் கடந்த வருடம் ஜனவரி மாதம் செய்திருந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை ரத்து செய்திருந்தது,அதனை தேசிய தொழில்நுட்பக் கழகம் கடந்த ஆண்டு இறுதியில் மறுஅறிவிப்பு செய்து இருந்ததாக தெரிகிறது.

சென்னை உயர்நீதிமன்ற தடை

சென்னை உயர்நீதிமன்றத்தில், பல் வேறு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை எத்தனை என குறிப்பிடவில்லை என தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நீதிமன்றம் சென்ற வருடத்திற்கான ஆட்சேர்ப்பை தடைதெய்து தீர்ப்பளித்து இருந்தது.

கடந்த அறிவிப்பின் பொழுது 3,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இந்த விண்ணப்பதாரர்கள் கடந்த வருடத்தின் இருதியில் வெளியிடப்பட்டிருந்த புதிய அறிவிப்பில் தங்களது விண்ணப்பங்களை புதிப்பிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

“நாங்கள் 17 துறைகளுக்கான 71 பதவிகளை தீவிரமான நேர்கானலுக்கு பின் வழங்குவோம்,” என நிர்வாக இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தெரிவித்தார்.” வெளி நாட்டு பல்கலைகழகத்தில் படித்த இந்தியாவை சேர்ந்தவர்களை நேரில் நேர்கானலுக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொண்டுள்ளோம், சென்ற முறை காணொளிக்காட்சி அனுமதிக்கப்பட்டிருந்தது,” என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here