ஹர்பஜன் சிங் தனது டிவிட்டரில் முட்டாள் தனத்திற்கும் எப்படி மருந்து கண்டுபிடிக்க போகிறோம் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 24 நாடுகளுக்கு மேல் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.
பல்லாயிரம் மக்களைக் கொன்று பல லட்சம் மக்களைப் பாதித்து இந்த வைரஸை பல நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளார். இதனால் மக்கள் தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக வீட்டிலிருந்தபடியே கைதட்டி ஆதரிக்கும்படி சொன்னார்.
மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் வந்து ஊர்வலமாக வெளியில் வந்து சமூக விலகலை கடைபிடிக்காமல் பிரதமர் மோடியின் வார்த்தையை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மக்கள் ஊரடங்கை உதாசீனம் படுத்தினார்கள்.
நேற்று முன்தினம் அதாவது மார்ச் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து வைத்து மெழுகுவர்த்தி, தீப விளக்கு மற்றும் டார்ச் லைட்டுகளை எரிய விட பிரதமர் மோடி கூறினார்.
ஆனால் அவரது கட்சியினரும் தவறாக புரிந்து கொண்டு ஊர்வலமாகவும் பட்டாசு வெடித்தும் ஏதோ தீபாவளியைக் கொண்டாடுவது போல கொண்டாடினார்கள்.
வைரஸை விளக்கு வெளிச்சத்தில் இறந்துவிடுவதாக நினைத்துக்கொண்டு ஊர் முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள்.
இதனால் பல இடங்களில் தீப்பற்றிக் கொண்டதை நாம் தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் தீயணைப்பு துறைக்கு இதுபோன்ற சம்பவங்கள் சந்திக்க நேரிட்டது.
இதனால் சமூக விலகலும் கைவிடப்பட்டது. 144 தடை உத்தரவை மறந்து மக்கள் வெளியில் ஊர்வலமாக சென்றார்கள்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
வைஷாலி நகர் என்ற ஏரியாவில் மாடியில் பட்டாசு வெடிக்கும் போது தீப்பற்றிக் கொண்டது.
ஆனால் உயிர்சேதம் இல்லை என்றாலும் தீயணைப்புத்துறை வந்து தீயை அணைக்கும் அளவிற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இந்த வீடியோவை ஹர்பஜன்சிங் பகிர்ந்து காட்டமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
We Will find a cure for corona but how r we gonna find a cure for stupidity 😡😡 https://t.co/sZRQC3gY3Z
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 6, 2020
நாம் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கலாம் இதுபோன்ற முட்டாள் தனத்துக்கு எப்படி மருந்து கண்டுபிடிக்க போகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.