Home விளையாட்டு பிஞ்ச் கணக்கை பஞ்சாக்கி, விரட்டியடித்த விராட்-ரோஹித்

பிஞ்ச் கணக்கை பஞ்சாக்கி, விரட்டியடித்த விராட்-ரோஹித்

521
0
மூன்றாவது ஒருநாள் பிஞ்ச் விரட்டியடித்த விராட்-ரோஹித்

பிஞ்ச் கணக்கை பஞ்சாக்கி, விரட்டியடித்த விராட்-ரோஹித். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

IND vs AUS 3rd ODI 2020

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் சேசிங் செய்வது கடினம் என்பதால் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

ஆனால், ஆஸ்திரேலியா வீரர்கள் சரியாக ரன்களை குவிக்கவில்லை. வார்னர் 3, பிஞ்ச் 19, ஓப்பனிங் விக்கெட்டை லட்டாக அள்ளினர் இந்தியா வீரர்கள்.

இந்தப் போட்டியிலும் ஸ்மித் நீண்ட நேரமாக போராடி சதம் அடித்து ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.

அவருக்கு துணையாக மர்னுஸ் 54 ரன்களும், அலெக்ஸ் கேரி 35 ரன்களும் எடுத்தனர். ஸ்மித் 131 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் அவுட் ஆகினார்.

50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி. ஷமி 4, ஜடேஜா 2, சைனி மற்றும் குல்தீப் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்தியா அபார ஆட்டம்

ஷிகர் தவான் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். எனவே அவர் ஆடுவது கேள்விக்குறியாகியது.

9 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் வைத்துக்கொண்டு இந்தியா களம் இறங்கியது. ஓப்பனிங் வீராக களம் இறங்கிய ராகுல் 19 ரன்னில் அவுட் ஆனார்.

இந்த விக்கெட் சற்று அச்சத்தையே கொடுத்தது. ரோகித்தும் விராட் கோலியும் இணைந்து ஆஸ்திரேலிய வீரர்களை விரட்டு விரட்டு என்று விரட்டினர்.

இருவருடய விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். ரோஹித் காயத்துடன் ஆடினாலும் 119 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

விராட்கோலி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 89 ரன்கள் இருந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 12 ரன்கள் தான் தேவை என்ற நிலை இருந்தது.

இதனால் சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்யவேண்டும் என நினைத்த கோலி ஜோஸ் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

பின்னர் அந்த ரன்களை கொண்டு ஷ்ரேயாஸ் அய்யர் அரைச்சதத்தை பூர்த்தி செய்ய நினைத்தார். 44 ரன்கள் இருந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை இருந்தது.

சிக்சர் அடித்தால் வெற்றி பெறலாம் அரைச்சதமும் பூர்த்தியாகும் என நினைத்தார் அய்யர். ஆனால் அவரால் சிக்சர் அடிக்க முடியவில்லை.

அடுத்த ஓவருக்கு ஸ்ட்ரைக்கை தக்கவைத்து கொள்ளலாம் என நினைந்தார் ஆனால் சிங்கிள் ஓட முடியவில்லை.

இதனால் ஸ்ட்ரைக் மனீஷ் பாண்டே கைவசம் சென்றது. சென்ற போட்டியில் ஒழுங்காக விளையாடவில்லை. எனவே இப்போட்டியில் கிடைத்த பாலில் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார்.

இதன் மூலம் இந்தியா வெற்றிபெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 44, மனீஷ் பாண்டே 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். விராட்கோலி தொடர் நாயகன் விருதினை வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here