ஐபிஎல்லுக்கு சங்கு ஊதியது கொரோனா; அப்போ தோனி உலகக்கோப்பை கனவு? ஒருவேளை ஐபிஎல் போட்டி முற்றிலும் ரத்தானால் தோனி எப்படி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்?
மீண்டும் இந்திய அணியில் தோனி?
ஐபிஎல் 2020 போட்டியில் தோனி சிறப்பாக விளையாடினால் மட்டுமே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தோனிக்கு இடம் கிடைக்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் தெரிவித்து இருந்தார்.
இதற்காக கடந்த சில மாதங்களாகவே தோனி கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பயிற்சியின் போது தொடர்ந்து 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டு மாஸ் காட்டினார்.
கொரோனா அச்சுறுத்தல்
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
இது தொர்பான முடிவை ஐபிஎல் கமிட்டியே எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் போட்டியை 15 நாட்கள் தள்ளி வைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா பரவுவது அதிகமானால் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகமே.
தோனியின் வயது முதிர்வு
தோனி கடந்த உலகக்கோப்பையில் இந்தியா வென்றால் கெத்தாக ரிட்டைர் ஆகலாம் என்ற கனவில் இருந்தார்.
ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய அணி தோல்வியைத் தழுவி வெளியேறியது. இருப்பினும் தோனிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து வழியனுப்பி வைக்கவே ஜூனியர் வீரர்கள் ஆசைப்படுகின்றனர்.
கொரொனா பாதிப்பு இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடினால் நிச்சயம் ஐபிஎல் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் தோனி சற்று வருத்தத்திலேயே இருப்பார். நீண்ட நாட்களாக தோனி விளையாடுவதைக் காண முடியாமல் தவித்த அவருடைய ரசிகர்களுக்கும் இது ஏமாற்றமே.
ஐபிஎல் போட்டி 15 நாட்கள் கழித்து நிச்சயம் நடைபெறும் என நம்புவோமாக! தோனி ரசிகர்களின் பிரார்த்தனை வீண் போகாது.